Header Ads



ராஜித்த சேனாரத்னவிற்கு, மஹிந்த ராஜபக்ஸ குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது - விதுர விக்ரமநாயக்க

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு மஹிந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் இன்று இடம் பெற்ற கூட்;டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமைச்சரவை பேச்சாளர். பொய் கருத்துக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சரவை பேச்சாளர் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.