Header Ads



லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்காவுக்கு நிகழ்ந்தது மஹிந்தவுக்கும் ஏற்படும் - எஸ்.பி.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெறுவதற்காக தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அவருக்கே அரசியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், இறுதியில் மைத்திரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க ஆகியோர் தலைமையிலான அணி மற்றும் லலித் அத்துலத் முதலி காமினி திஸாநாயக்க தலைமையிலான அணியினருக்கு ஏற்பட்டது போல் வெற்று மைதானத்தில் உரையாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சேனாநாயக்க, அனுர பண்டாரநாயக்க ஆகியோர் கட்சியை உடைத்து கொண்டு வெளியில் சென்றனர். அவர்களுடன் கட்சியின் மத்திய செயற்குழுவை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் சென்ற போதிலும் இறுதியில் வெற்று மைதானத்தில் உரையாற்றும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.

கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள் மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் திரும்பி வந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற லலித் மற்றும் காமினிக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டது. இவர்கள் நுகேகொடையில் நடத்திய கூட்டத்திற்கு விமல் வீரவன்ஸவினர் மகிந்தவுக்கு ஆதரவாக நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனத்தை விட அதிகளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

லலித்தும் காமினியும் இப்படி நாடு முழுவதும் பாரிய கூட்டங்களை நடத்தினர். மக்கள் அந்த கூட்டங்களில் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் அவர்கள் வெற்று மைதானத்தில் உரையாற்ற நேர்ந்தது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. "செருப்பாலே அடிப்பேன் நாயே" என்று இவனை அடித்து விரட்ட யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றினாலும், இவனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கின்ற அளவுக்கு இவனையும் விட கேடு கெட்ட ஒருவன் இருக்கின்றானே என்று நினைக்கும் பொழுது மெளனமாகி விடுகின்றேன்.

    ReplyDelete
  2. Kettavanai kondum nalla vidayathukku udavi seyyalam.inda kanippil thasn my3udaya mudivu edukkapattathu.

    ReplyDelete

Powered by Blogger.