Header Ads



அம்பு எய்து, ஆசிரியையை படுகொலை செய்த மாணவன்

ஸ்பெயினில் அம்பு தாக்கி ஆசிரியை ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறைக்குள் ஆசிரியை ஒருவர் வந்தார்.

அப்போது 13 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த வில்லில் அம்பு ஏற்றி சரமாரியாக எய்தியதில், சம்பவ இடத்திலேயே அந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அவர் தவிர காயமடைந்த 2 ஆசிரியர்களும், 2 சக மாணவர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து சென்ற பொலிசார் அம்பு எய்திய மாணவனை பிடித்து, அவனது பையை(Bag) சோதனை செய்தனர்.

அதில் அம்பு மற்றும் வெட்டுக்கத்தி இருந்தது. ஆனால் அவை ஆளை கொல்லும் ஆயுதம் என்பது மாணவனுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாய் இருக்கலாம் என்பதால், தற்போது மனநல மருத்துவமனையில் அவனுக்கு பரிசோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், ஆசிரியையை கொன்ற மாணவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஏனெனில் அவனுக்கு இன்னும் 14 வயது ஆகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பள்ளியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.