ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை - சுதந்திர கட்சி கொண்டு வருகிறது
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரானால் அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கையளிக்கப்படும் பட்சத்தில் அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதன் பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது என்பதே இந்த அரசியல் குற்றப் பிரேரணையின் நோக்கமாகும்.
பாராளுமன்றத்தில்பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment