Header Ads



காத்திருக்கும் மஹிந்த தரப்பு..!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு போட்­டி­யிட வாய்ப்பு வழங்­கப்­ப­டுமா இல்­லையா என்ற தீர்­மானம் எடுக்­கப்­படும் வரை மஹிந்த தரப்­பினர் காத்­தி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான தீர்­மா­னத்தை சுதந்­திரக் கட்சி அறி­வித்­த­வுடன் மஹிந்த தரப்­பினர் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­பது என் றும் நேற்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தான உறுப்­பி­னர்கள் 37 பேர் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து விஷேட கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யுள்­ளனர்.

மெத­மு­ல­னவில் உள்ள மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கால்டன் இல்­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பின் போது எதிர்­வரும் பொதுத் தேர்தல், பிர­தமர் வேட்­பாளர், எதிர்க் கட்சித் தலைவர் விவ­காரம், மே தின கொண்­டாட்டம் உள்­ளிட்ட பல்­வேறு அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆர­யப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பிள­வு­ப­டு­வதை தவிர்த்து கை சின்­னத்தை பாது­காத்து அதன் கீழ் ஒரே கூட்­ட­மைப்­பாக போட்­டி­யி­டு­வது குறித்து இதன் போது விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­வர்­களும் இதன் போது முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் தமது விவ­காரம் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். அத்­துடன் சிறு கட்­சி­களின் தலை­வர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, விமல் வீர­வன்ஸ உள்­ளிட்­டோரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் தனிப்­பட்ட முறையில் கலந்­து­ரை­யாட்­யுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரு­மான மஹிந்த யாப்பா அபே­வர்­தன, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பந்­துல குண­வர்­தன, ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, வாசு­தேவ நாணயக் கார, குமார வெல்­கம, தினேஷ் குண­வர்­தன, டீ.பீ.ஏக­நா­யக்க, அருந்­திக பெர்­ணான்டோ, லக்ஷ்மன் வசந்த பெரேரா, சரத் வீர­சே­கர, சாலிந்த திஸா­நா­யக்க, மஹிந்­தா­னத்த அளுத் கமகே, ஜயந்த கெட்­ட­கொட, காமினி லொக்­குகே, விமல் வீர­வன்ச, ரஞ்சித் சொய்ஸா, சாமிக புத்­த­தாச, நாமல் ராஜ­பக்ஷ, டலஸ் அல­கப்­பெ­ரும, சஜின் வாஸ் குண­வர்­தன, ரொஹான் ரத்­வத்த, ஜீ.எல்.பீரிஸ், எஸ்.எம்.சந்­தி­ர­சேன, மொஹான் டீ சில்வா, தேனுக விதான கமகே, நிசாந்த முது­ஹெட்­டி­கம, ஹெஹ­லிய ரம்­புக்­வெல்ல, கீதாஞ்­சன குண­வர்­தன, ஸ்ரீயானி விஜே விக்­ரம உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே நேற்று இவ்­வாறு முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­தித்­தி­ருந்­தனர்.

புது வரு­டத்தில் சந்­தித்து பேச்சு நடத்தும் நோக்­கி­லேயே நேற்று காலை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் கால்டன் இல்­லத்­துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மேல்­மா­காண முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்கஇ உதய கம்­மன்­பில உள்­ளிட்ட மாகாண மற்றும் உள்­ளூ­ராட்சி சபை­களின் உறுப்­பி­னர்­க­ளென சுமார் 100 பேர் வரையில் கூடி­யி­ருந்­தனர்.

இதே­வேளை எதிர்­வரும் பொதுத் தேர்தல் தொடர்­பிலும் தற்­போ­தைய அர­சியல் நிலமை தொடர்­பிலும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் அவரைக் சந்­திக்கச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையே விஷேட சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.

எதிர்­வரும் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தல­மையின் கீழ் புதிய கூட்­டணி அர­சியல் கட்­சி­யொன்று தயா­ரா­கி­வ­ரு­வ­தாக தக­வல்கள் வெளி­யான நிலை­யி­லேயே இந்த சந்­திப்பு இடம்­பற்றுள்.ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களுடன் தனியாக சந்திப்பினை மஹிந்த ராஜபக்ஷ நடத்தியுள்ளார். இதன் போது இந்த நீக்கத்துக்கு எதிராக உறுப்பினர்கள் நீதிமன்றை நாடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Striking example to how a dictatorial mind set is striving to re capture the power
    from the very next minute after a clear defeat in the election.What a power hungry
    wolves ! Is this not an indication,food for thought that the story about a conspiracy
    at Temple trees to play with the election result could be real ? Muslims especially
    have to be very vigilant about their future in the country.This lot is not acting in the
    best interest of the country but in the full interest of Buddhist Sinhala extremism
    and plundering of national wealth.They built up their politics on racism and they
    win or lose as a result of the same racism and other evils.We know by experience
    how quickly we became a nation of drug addicts and corruption and HIV .

    ReplyDelete

Powered by Blogger.