Header Ads



ஜனாதிபதி மைத்திரியை, பொம்மையாக்க நாம் தயாரில்லை - சஜித் பிரே­ம­தாஸ

மக்­களின் நன்­ம­திப்பை பெற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அதி­காரம் இல்­லாத பொம்­மை­யாக்க நாம் தயா­ராக இல்லை. எல்லை மீறிய அதி­கா­ரங்­க­ளையே நீக்­கவுள்ளோம் என வீட­மைப்பு மற்றும் சமுர்த்தி விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

மக்­க­ளுக்கு நாம் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக ஊழல், மோச­டியில் ஈடு­பட்­டோரை விரைவில் கூண்டில் நிறுத்தத் தயங்க போவ­தில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அம்­பாந்­தோட்டை தெம்­ப­ர­வெவ பிர­தே­சத்தில் நேற்று சமுர்த்தி வேலைத்­திட்­டத்தின் ஊடாக கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

சமுர்த்தி அமைச்சின் ஊடாக சமுர்த்தி வங்­கி­களில் சேமித்து வைக்­கப்­பட்­டுள்ள 72 ஆயிரம் மில்­லியன் ரூபா பணத்தை திவிநெகும, சமுர்த்தி சலுகை பெறு­வோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நோக்­குடன் இன ,மத பேதம் பாராமல் அனை­வ­ருக்கும் குறித்த சலு­கை­களை நாம் பெற்­றுக்­கொ­டுக்க உள்ளோம்.

மேலும் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது பிர­சார மேடை­களில் அப்­பாவி ஏழை மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப 200 சத­வீத சமுர்த்தி சலு­கை­களை நாம் வழங்­குவோம் என உறு­தி­ய­ளித்தோம். இதன்­படி ஏப்ரல் மாத ஆரம்பம் தொடக்­கமே 14 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 14 பேருக்கு சலுகை வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.
தற்­போது நாம் சமுர்த்தி துறையை அர­சியல் மயப்­ப­டுத்­த­லிலி­ருந்து நீக்­கி­யுள்ளோம். அத்­தோடு பதவி உயர்வு, இட மாற்றம் அனைத்­தையும் திற­மையின் அடிப்­ப­டையில் மேற்­கொள்ள உள்ளோம்.

ஜன­வரி 8 ஆம் திகதி யாரும் எதிர் ­பா­ராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இதன்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன மகத்­தான வெற்­றி­யினை பெற்றார். எமது நோக்கம் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாகும்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதியின் அதி­கா­ரங்­களை நீக்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு வலு சேர்க்கும் கட்­ட­மைப்பை உரு­வாக்­குவோம். ஜனா­தி­பதி முறை­மை­யி­னூடாக நாட்­டிற்கு ஏற்­படும் பாதிப்­பினை முழு­மை­யாக நீக்கி புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தே எமது நோக்கமாகும்.எனினும் மக்­களின் நன்­ம­திப்பால் வெற்றி கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைவெறுமனே அதி­காரம் இல்­லாத பொம்­மையாக்க நாம் தயா­ரில்லை.அதற்கு மாறாக ஜனா­தி­பதி முறை­மையின் கீழ் உள்ள எல்லை மீறிய அதி­கா­ரங்களை மாத்திரமே நீக்கவுள்ளோம். இதனுடாக ஊழல் மோசடிகளிலிருந்து நாட்டை முழுமையாக தூய்மையாக்கி, நல்லாட்சியை ஏற்படுத்துவது நமது நோக்கம்.

அத்தோடு ஊழல், மோசடி தொடர்பில் குற் றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிப்போம் என்றார்.

No comments

Powered by Blogger.