Header Ads



'பழைய குருடி, கதவைத் திறடி'

(அபூ அஸ்ஜத் )

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில்  தற்போது குளிர்கால யுத்தம் ஒன்று திறைமறைவில் இடம்பெற்றுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகிவருகின்றன.அது இந்த புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் முக்கிய பங்களாராக ஜக்கிய தேசிய கட்சியே இருக்கின்றது என்றவாதம் பிரதமரை ஆட்கொண்டுள்ளது.இதற்கு ஆதரவாக ஜனாதிபதி மைததிரபால சிறிசேன அவர்கள் ஒரு சில இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என தெரிவித்த சந்தர்ப்பம் நினைவுக்கு வரும் என என்னுகின்றேன்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் 100 நாள் இலங்கை அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு ஆக வேண்டும் என்ற நியதியும் காணப்படத்தான் செய்கின்றது.தேர்தல் வெற்றியின் பிற்பாடு வரவு செலுத்திட்டத்தை கடந்து தற்போது எதிர்கட்சி யார்?அதற்கு எவ்வாறு ஆதரவு அளிப்பது?எதிர்ப்பு தெரிவிப்பது என்பது தொடர்பில் சிறுபான்மை மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பெரும் உள்நாட்டு யுத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அன்றாடம் வெளிவரும் செய்திகளில் கேட்கவும்,பார்க்கவும் முடிகின்றது.

இதற்கிடையில் தேர்தல் திருத்தம்,19 ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு சின்மசொற்பனமாக அமையப் போகின்றது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்பார்த்த வரவு செலவு திட்ட சலுககைகள் வந்தடைகின்றதா என்பதை அவதானிக்கும் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் இருந்தேவருகின்றது..

இந்த தேர்தலில் ஏப்ரல் மாதமும் பிறந்துவிட்டது.தமிழ்,சிங்கள புதுவருடத்தை இம்முறை மக்கள் சுதந்திரமாக கொணடாட தயாராகிவருகின்ற போது,ஜக்கிய தேசிய கட்சி அவசரமாக பொதுத் தேர்தல் குறிப்பிட்ட 100 நாளுடன் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் .பொதுத் தேர்தலை நடத்தாமல் காலத்தை கழித்தால் தாங்கள் தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போவதில்லை என்றும் அதனை வலியுறுத்தி வீதிக்கு இறங்கக் கூட தயங்கப் போவதில்லை என்றும்  பகிரங்க அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தமது நகர்வுகளையும்,கூட்டுப் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ள சூழலையும் அவதானிக்கமுடிகின்றது.

ஜனாதிபதிக்கும்-பிரதமருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துவரும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.அரசாங்கத்தை பொருத்த வரையில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.இருந்த போது அரசாங்கத்திற்கு தமது நிர்வாக செயற்பாடுகளை ஒழுக்கத்தட்ன் முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களுக்கு சரியான முறையில் பதிலளிக்கும் கூட்டு பொறுப்புக் கொண்ட அமைச்சரவையொன்று இருக்குமெனில் இவ்வாறான முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிவருவதற்கு முன்னர் அவை உடன்பாடு காணப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து ஊகித்து அறிந்து கொள்ளமுடியக் கூடிய விடயம் தற்போதைய அமைச்சரவையில் தமது கட்சிகளின் குரல்களே பிரதானமாக இருக்கின்றது  என்பதாக,பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருப்பது தொடர்பில் சில கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,மற்றும் ஜாதிக ஹெல உரமய என்பன தெளிவாக தெரிவிக்கும் கருத்தாகும். அப்படியொன்றால் இருண்டு தெரிவுகள் இந்த கட்சிகளிடத்தில் இருக்கின்றது.

அதில் ஒன்று தேர்தல் ஒன்றுக்கு சென்று ஜக்கிய தேசியக் கட்சியின் பலத்தை அறிந்து கொள்வது மற்றையது,தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை ஒன்று சேர்த்து,அரசாங்கத்தில் அங்கம் கொண்டுள்ள ஏனைய கட்சிகளின் ஒத்தாசையினை பெற்றும் அரசாங்த்தை அமைப்பது என்பதுவாகும்.இதில் எது சாத்தியம்,என்பது எவருக்கும் தெரியாததொன்று என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தற்போது பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதை பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்து எடுத்து தேசிய அரசாங்கம் ஒன்றை சிக்கல் ஏற்படும் வரை இழுத்து செல்வது காலத்திற்கு தேவையானதொன்று என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கருதக் கூடும்,அதே வேளை ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக் கொண்டு அடுத்த ஜனாதிபதியாக வர இருப்பவர் இந்த பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்கு தேவையான அடித்தளத்தினை இடும் முயற்சியாக இந்த தேசிய அரசாங்க கோற்பாடு இருக்கலாம் என்பது எழுந்தமான முறையில் கட்சிகளுக்குள் பேசப்படும் ஒரு விடயமாகும்.இந்த அளவை நிறுத்தல்களுக்கு மத்தியில் தான் புதிய அரசாங்கம் தமது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது.

இந்த முறுகல் தேர்தலில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும்.ஆட்சி மாற்றத்தை வேண்டிய மக்கள் மீண்டும் பழைய ஆட்சி உருவாகுவதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதை கள நிலவரத்தில் இருந்து காணமுடிகின்றது.இந்த கணிப்பீடு வெறும் வடக்கிலும்,கிழக்கிலுமே காணப்படுகின்றதே ஒழிய ஏனைய மாகாணங்களில் அந்த நிலை வடக்கினையும்,கிழக்கினையும் ஒப்பீட்டு நோக்குகின்ற போது வித்தியாசமானதொரு கணக்கெடுப்பின் முடிவினை தான் காட்டகின்றதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியில் இருந்த சில இருக்கமான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தில் இல்லை என்பதால் இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் ஊடுருவல்களும்,பாதுகாப்பு தொடர்பிலான செயற்பாடுகளிலும் பெரும் சரிவினை கொண்டுள்ளதாகவு தென் மாகாண மக்கள் கூறுகின்றனர்.மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் புதிய அரசு கைக் கூப்பி கும்பிடும் நிலைக்கு மாறியிருப்பதும்,அது இந்த நாட்டில் மீண்டும் சிறுபான்மை சமூகங்களின் அடக்கு முறைக்குள் பெரும்பானெ்மை மக்களை கொண்டுவரும் என்ற அச்ச நிலையினை தோற்றுவிப்பதாக சிங்கள கடும் போக்கு அமைப்புக்கள் வானுயர கூறிவருகின்ற செய்தியினையும் நாம் உள்வhங்கியாக வேண்டும்.

இந்த நிலையில் 19 வது திருத்தத்தினை சபையில் சமர்பிக்கும் போது கட்சிகளின் ஆதரவு தொடர்பிலும் பெரும் கேள்வி எழுந்துள்ளது.இந்த திருத்தம் சபையில் அங்கீகாரத்திற்கு விடப்படும் போது குறிப்பாக இதனை எதிர்க்கும் சக்திகளின் நிலைப்பாடு தொடர்பிலும் நாம் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.