ஏஞ்சலினா ஜோலியின் தாராள மனசு - சிரியா குழந்தையை தத்தெடுக்கிறார்
பிரபல ஹொலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும் நான்காவது குழந்தையை தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் அவர்களின் சொந்த குழந்தைகள், ஏனைய 3 குழந்தைகளும் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பிய ஆகிய நாடுகளில் இருந்து தத்துதெடுத்து கொண்டவர்கள்.
அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட பிறகு, மோசமான உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவிற்கு பல முறை பயணம் மேற்கொண்டார் ஏஞ்சலினா.
அங்கு போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து மிகவும் மனம் வருந்தினார். எந்த விதத்திலாவது அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். இதுபற்றி தனது கணவர் பிராட் பிட் உடன் ஆலோசனை நடத்திய பின், சிரியாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை என முன்பே அறிவித்துள்ளார்.
ஏற்கனவே வேறு நாடுகளை சேர்ந்த வேறு நிறங்களில் உள்ள குழந்தைகள் அவர்களின் குடும்பத்தை அலங்கரித்து வரும் நிலையில் சிரியாவில் மற்றொரு அழகிய பெண் குழந்தையும் அவர்களுடன் இணையபோவது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலான பெண், மிகவும் முற்போக்கான, முன்மாதிரியான பெண். இன்றைய காலத்தின் மாதர் அரசிகள். அஞ்சலினா, பிராட் தம்பதிகளுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteMuslim samoohathukku nandri. Muslim ana oru kulandaiyai. Oru non Muslim idam oppadaitha perumaikaha!!!!
ReplyDeleteLittle star ai pondravarhal inda news a kettu athiham mahilvargal.
VoiceSriLanka,
ReplyDeleteஅஞ்சலீனா ஜூலி போன்றவர்கள் உங்களைப் போன்று குறுகிய மனநிலையில் சிந்திப்பவர்கள் அல்ல.
முதலில், சிரியாவில் கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றார்கள்/ வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிரிய நாட்டு மக்கள் பொதுவாக மதவெறியர்கள் கிடையாது. இன்று ஷியா மத வெறியன் என்று வஹ்ஹாபிச ஊடகங்களால் குறிப்பிடப்படும் அசாத்தின் தந்தை ஆட்சியில் இருந்த காலத்தில் தான், வஹ்ஹபிசத்தின் பெரும் அறிஞர்களில் ஒருவரான நாசுருத்தீன் அல் அல்பாணி டமஸ்கஸில் தங்கியிருந்து தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அடுத்து அஞ்சலினா ஜூலி போன்ற போன்றவர்கள், நீங்கள் நினைப்பது போன்று குறுகிய மதவெறி மனம் படைத்தவர்கள் அல்ல, அவர்கள் தத்து எடுத்தது, முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தையையும் முஸ்லிமாகத்தான் வளர்ப்பார்கள். குழந்தை வேண்டுமானால், வளர்ந்த பின்னர் மதம் மாறலாம். ( உதாரணம், இரண்டு முஸ்லிம் சிறுவர்களை வளர்த்த இந்திய எழுத்தாளர், காலம் சென்ற கமலா தாஸ்)
ஒரு முஸ்லிம் குழந்தை எங்கேயோ மதம் மாறப் போகின்றது என்று கண்ணீர் வடிக்கும் நீங்கள், உங்கள் ஊரில் இருக்கும் ஏழை முஸ்லிமை திரும்பிப் பார்க்கின்றீர்களா? (இது பொதுவாக, அனைவருக்குமான கேள்வி)