Header Ads



கல்முனை பௌத்த விகாராதிபதியின் விசனமும், கண்டனமும்

கல்முனைப் பிரதேசத்தில் விழாவிற்கு அழைத்து மதத்தலைவர்களை அவமரியாதைப்படுத்துகின்றனர் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாரையின் பௌத்த விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெட்ண தேரர் விசனமும் கண்டனமும் தெரிவித்தார். 

கல்முனைப் பிரதேசத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் மத குருமாருக்குரிய கௌரவம் வழங்கப்படாதது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கரெட்ணதேரர் மேலும் குறிப்பிடுகையில்

கல்முனைப் பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக நான் உள்ளேன். இந்நிலையில் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இன ஒற்றுமைக்காகவும் அவர்களது அபிவிருத்திக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றேன். இதனை பிரதேச மக்கள் நன்கறிவார்கள். 

கல்முனையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அங்கு சென்றால் மத குருமாருக்கு வழங்கப்படுகின்ற கௌரவம் கூட வழங்கப்படாது அவமரியாதைப்படுத்துகின்றனர். 

நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மதகுருமாரை ஒரு காட்சிப்பொருளாக மட்டும் முன்னிறுத்தி விட்டு பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாகவும் அழைக்கப்பட்டவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி நிகழ்வுகளை நடத்துகின்றனர். 

மங்கள விளக்கு ஏற்றுகின்ற நிகழ்வில் கூட முதன்மையாக மதகுருக்களை முன்னிலைப்படுத்துவதில்லை. இந்நிலையில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் வெறும் பொம்மைகளாக இருந்து விட்டு வர வேண்டிய  துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது. 

எவராக இருந்தாலும் மதத்தையோ அவர் சார்ந்த மத குருக்களையோ மதிக்காத சமூகங்கள் வாழ்வில் முன்னேற்றங்களைக் காண முடியாது. அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட மத குருமார்கள் வெறும் காட்சிப் பொம்மையாகவே வைக்கப்பட்டிருந்தனர். அங்கு மத குருமாரின் ஆசியுரைகள் கூட இடம்பெறவில்லை என விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெட்ண தேரர் தெரிவித்தார்.  

4 comments:

  1. மதம் என்பது நாகரீகமான, அமைதியான மனித வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற பண்டமாக மாறிவருவதை கண்கூடாகக் காண்கின்றோம்.

    ReplyDelete
  2. Little star:
    What about Islaam.? You are saying that is not practical, not suitable for the modern peaceful life??

    ReplyDelete
  3. @Jaffna boy,

    I am a muslim too, but what is the real Islam? who knows it perfectly? At present day's world, no one knows what is the perfect Islam! Everybody, every scholar, every moulavi, every Lebbai, every Jamah etc have their own version of Islam and explanation.

    It is not sure what is the real & original version of Islam as everybody clams they have the original Islam, including Shias.

    Today's real life, wherever Islam has the majority, the fithna is there. It is from ISIS, Libya, Yemen even in our own Kattankudy. So, without finding the original form of Islam,no use in pointing fingers on others.

    Thank you jaffna boy.

    ReplyDelete
  4. Little Star:
    Alhamthulillah, I am so glad hearing that you are a Muslim. May Allah keep all of us till we pass away.Back to the subject matter of this article, unlike other religious leaders, our true Ulama do not expect respect from other people. On contrary,they are in fact accountable for their knowledge.This is how our religion of Islam differs from others.
    Now back to the question of where the true Islam: yes I agree with you, these days many Ulama preach various Tha'wa. This is the reality& from the will of Allah. What you need to do is find out Muthaqeen, saliheen Ulama and learn, you will not be misguided.Shia,as they scold Aisha,and other Sahaabah- do not want accept true Hadidh- they are out of Islaam. May Allah guide all of us. Aameen

    ReplyDelete

Powered by Blogger.