Header Ads



மஹிந்த போக மாட்டார், வாழ்த்துச் செய்தி அனுப்புவார்..!

மே தினக் கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எந்தவொரு மே தினக் கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு ஹைட் மைதானத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு கட்சிகள் இணைந்து கிருலப்பனையிலும் மே தினக் கூட்டங்களை நடாத்தவுள்ளன.

மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா அண்மையில் உத்தியோகபூர்வமாக மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும், இந்த அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதனால் தாம் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மஹிந்த அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் கிருலப்பனையில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இப்படிச் சொன்னாலும், கடைசி நேரத்தில் வேறு விதமாக நடக்கவும் கூடும். மைத்ரி கூட, முதல் நாள் மகிந்தவுடன் அப்பம் சாப்பிட்டுவிட்டுத்தான், அடுத்தநாள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே கலக்கினார்.

    ReplyDelete

Powered by Blogger.