Header Ads



'சவூதி அரேபியாவுக்கு அடிபணியமாட்டோம்'

சவூதி  அரேபியா தலைமையிலான வான் தாக்கு தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என்று யெமன் 'pயா ஹவ்தி கிளர்ச்சிக் குழு தலைவர் உறுதியளித்துள்ளார். ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் உரிமை யெமன் மக்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹவ்தி தலைவர் அப்துல்மலிக் அல் ஹவ்தி தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் உரை யாற்றியபோது, "எமது யெமன் மக்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்" என்று குறிப் பிட்டார். ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 25 ஆவது நாளாகும் வான் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி எமது போராட்டம் தொடரும் என்றும் கிளர்ச்சிக் குழு தலைவர் உறுதி அளித்தார். ஹவ்திக்கள் ஈரானின் உதவியை பயன்படுத்தியே யெமன் ஜனா திபதி அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் அரசை அகற் றியதாக சவ+தி அரேபியா குற்றம்சாட்டி வருகிறது.

எனினும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்த மோதல்கள் மற்றும் தாக்குதல்கள் யெம னெங்கும் தொடர்ந்ததாக சவ+தி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் அஹமது அஸரி ஞாயிறன்று குறிப்பிட்டார். இதில் தலைநகர் சானா, சாதா நகரங்களில் இருக்கும் ஹவ்திக்களின் தொலைதூரம் தாக்கும் ஏவுகணை களஞ்சியங் களை இலக்கு வைத்து குறைந்தது 106 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால்; மனிதாபிமான உதவிகளை வைத்தி ருந்த களஞ்சியசாலை ஒன்றின் மீது சவ+தி கூட்டணி வான் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச உதவி நிறுவனமான ஒக்ஸ்போம் குற்றம்சாட்டியுள்ளது. ஹவ்திக்களின் கோட்டையாக இருக்கும் சாதாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதென் நகரின் தெற்கு பகுதியை ஜனாதிபதி ஹதி ஆதரவு படையினர் ஞாயிறன்று கைப்பற்றியுள்ளனர். இந்த பகுதி ஹவ்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலேவுக்கு விசுவாசமான படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த முன்னேற்றத்தின் மூலம் அதென் நகரில் கிளர்ச்சியாளர்கள் கைவசம் இருக்கும் விமான நிலையத்தை தாக்குவதற்கும் ஹதி எதிர்ப்பு படையினரின் விநியோகப்பாதையை முடக்குவ தற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே யெமனின் சவ+தி அரேபிய எல்லையின் அரைப்பகுதியின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும் இராணுவப் பிரிவு தளபதி ஜனாதிபதி ஹதிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் குறைந்தது 15,000 யெமன் துருப்பினர் சவ+தி ஆதரவு நிலைப்பாட்டை பெற்றுள்ளனர்.

முதல் இராணுவ மாவட்டத்தின் பிரகேடியர் nஜனரல் அப்துர்ரஹ்மான் அல் ஹலீலி ஜனாதிபதி ஹதியின் பிரதிநிதிகளின் சட்டரீதியான அங்கீ காரத்தை ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஹதியின் தரப்பினர் ராய்ட்டருக்கு உறுதி செய்துள்ளனர்.

எனினும் யெமன் இராணுவத்தின் பெரும்பான் மையான படையினர் மக்கள் போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவின் ஆதரவுடையவர் களாவர். இந்த படையினர் ஹவ்திக்களுடன் இணைந்து யெமனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்க போராடி வருகின்றனர்.

எவ்வாறாயினும் இராணுவத்தின் வடகிழக்கு துருப்பினர் ஹதிக்கு ஆதரவை வெளியிட்டிருப்பதால், யெமன் இராணுவத்தின் சுமார் 10 பிரிவுகள் சவ+தி ஆதரவு ஜனாதிபதி ஹதிக்கு விசுவாசத்தை வெளியிட்டுள்ளன. எனினும் ஹதி ஆதரவு படையினரை வழி நடத்துவதற்கானமைய கட்டளைத்தளம் ஒன்று இது வரை நிறுவப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிரதான நகரான அதெனை நோக்கி முன்னேறியதை அடுத்து ஜனாதிபதி ஹதி சவ+தியில் தஞ்சமடைந்துள்ளார்.

3 comments:

  1. Leave the AUTHORIZED government of YEMEN to RULE it
    and go back to your LAND
    and fight for the OPPRESSION (if any) by legal way
    DO NOT bring RASISM inculcated on your head by IRAN into YEMEN and destroy the peace between SHIA and SUNNI of YEMEN.

    ReplyDelete
  2. நீங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிவதில்லையே அப்படி இருக்கும் போது சவுதிக்கு ஏன் அடிபணிய வேண்டும்

    ReplyDelete
  3. சவுதியால் ஏமனில் செய்ய முடிவதெல்லாம், அமெர்க்கா ஆப்கானிஸ்தானில் செய்ததைப் போன்ற ஒன்றைத்தான். அமெர்க்க (ரஷ்ய ஆக்கிரமிப்புக் காலம் முதல்) ஆப்கானிஸ்தானில் என்ன செய்தது என்று சொல்லத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.