இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை..!
சூரியன் இன்று (05) முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக நேர் கோட்டில் பயணம் செய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் கொக்கல, நாக்குலகமுவ மற்றும் தெனிபிட்டிய ஆகிய பிரதேசங்களில் நண்பகல் 12:13 மணியளவில் சூரியன் நேர்கோட்டில் பயணிப்பதை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று (05) மாலை வேலையில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் தமது பொருட்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment