“இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சியில், மாற்று மதத்தினர் அதிகமாக கேட்ட கேள்விகள்..!
மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நடத்திவரும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சியின் ஒரு அங்கம் கடந்த 19.04.2015 ஞாயிற்றுக் கிழமை சிலாபம் க்ரவ்ன் மண்டபத்தில் இடம் பெற்றது.
✔ சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் மாற்றுமதத்தினரை தாக்கியளிப்பது ஏன்?
✔ முஸ்லிம் பெண்கள் தமது முழு உடலையும் மறைத்து ஆடை அணிவது ஏன்?
✔ கிருத்தவ மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன?
✔ முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்?
✔ முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவது சரியா?
போன்ற பல கேள்விகள் மாற்று மத சகோதரர்களினால் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டது. இஸ்லாம் மார்க்கம் தொடர்பான மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.COM அவர்கள் பதிலளித்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இதற்கு முன் நடைபெற்ற “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சிகளின் DVD க்கள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் இப்புதிய குழுவினர் சரியான முறையில் எல்லாவற்றுக்கும் பதிலளித்திருப்பார்களா? தௌஹீத் உண்மையான கொள்கை தான். ஆனால் இவர்களின் பகுத்தறிவுக்குப் படாவிட்டால் ஹதீஸை மறுப்பது இஸ்லாத்தில் இவர்கள் கொண்டுவந்த நவீன பித்அத். மார்க்க அறிஞர்களின் கருத்துகளைக் கூட மறுப்போர் இவர்கள். எனவே இவர்களை அணுகுவோரிடம் நிதானம் அவசியம்.
ReplyDeleteசஹீகாண ஹதீஸ் என்பது ஒன்றும் வஹியினால் உறுதிப் படுத்தப் பட்டது அல்ல. அறிஞர்கள் தமது புத்திக்கு ஏற்ப, தமக்குத் தெரிந்த சில லோஜிகள் முறைகளை வைத்து தீர்மானித்தது, ஆகவே சஹீகாண ஹதீஸ் என்று சொன்ன மாத்திரத்தில் அதில் மூழ்கிவிடத் தேவையில்லை.
ReplyDeleteஹதீஸை சஹீஹ் என்று தீர்மானிக்க நபி (ஸல்) அவர்களோ, இறைவனோ எத்தகைய நியதிகளையும் ஏற்படுத்தவில்லை. குர்ஆனை மட்டுமே அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்களித்து இருக்கின்றான், ஆகவே சஹீகாண ஹதீஸ் என்று சொல்லி, குர்ஆனை பிழை காணவோ, முரண்பாடாக்கவோ முயல்வது, இஸ்லாத்தையே கோமாளித் தனமாக மாற்றிவிடும்.
மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம், சூனியத்தாலே சூரியனை மறைக்கலாம் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பம்மாத்து, இதற்கு சஹீகாண ஹதீஸ் என்று வக்காலத்து வாங்குவது, குர்ஆண், இஸ்லாம் குறித்த சிந்தனா ரீதியான அறிவின்மையே காரணம். வெறுமனே மந்திரம் ஓதுவது போன்று இஸ்லாம் படிப்பதால் பயனில்லை, அல்லாஹ் சிந்தனையையும் சேர்த்துத்தான் மனிதனை படைத்து இருக்கின்றான், அதனை பயன் படுத்துங்கள்.
அதே நேரத்தில், இந்த SLTJ இந்த குழுவினர், வேண்டும் என்றே வம்பை உண்டுபண்ணும் குழுவினர் என்பதையும் மறுக்க முடியாது. அன்சார் மவ்லவி, முகம்மது மவ்லவி ஆகியோருடன் இவர்கள் எவ்வளவு மோசமாக வம்பு பண்ணுகின்றார்கள் என்பதை இவர்களின் முகநூல்களில் பார்க்கலாம். விமான நிலையத்தில், மவ்லவி மலசல கூடம் நுழையும் போட்டோவையும் பிடித்து, முகநூளில் போட்டு பிரச்சாரம் செய்கின்றார்கள் என்றால், இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?