சவூதி அரேபியாவில் இலங்கை பெண் படுகொலை, சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர கணவன் வேண்டுகோள்
சவூதி அரேபியாவுக்கு பணிபெண்ணாகச் சென்ற தனது மனைவி அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.8.24ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தனது மனைவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவூதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லாம் கதை, காணாமல் போனாராம், நாலு மாதம் கழிந்து சடலம் கண்டெடுக்கப் பட்டதாம்.
ReplyDeleteநல்லவேளையாக இஸ்லாத்தில் மனித மாமிசம் ஹராம், இல்லாவிட்டால் சவுதிக்குப் போகும் எந்தப் பணிப்பெண்ணும் உயிருடன் திரும்ப முடியாமல் போயிருக்கும், எலும்புக் கூடு மட்டும்தான் நாடு வந்து சேர்ந்து இருக்கும்.
மரணமான சகோதரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிலருக்கு சவூதி என்றால் பிடிக்காதே சவூதியில் என்னனை பணிப்பெண்கள் உள்ளார்கள் அவர்களில் எத்தனை பேருக்கு இவ்வாறு நடந்துள்ளது இலங்கையிலும் இந்தியாவிலும் மாதத்திற்கு எத்தனை இவ்வாறான செயல்கள் நடைபெறுகின்றன எத்தனை வீதமான நபர்கள் வீட்டுப்பணிப்பெண்கள் வைத்துள்ளனர்? இவர்கள் வேண்டுமானால் அவர்களின் பெண்களை அனுப்பாமல் இருக்கலாம் தானே? அதுதுhனே தடுக்க சிறந்த வழி?
ReplyDeletemay be she runaway from the sponsor house and got into trouble since she is an illegal worker. it happens very often. anyhow i am very sorry for the loss of a life. proper investigation is needed.
ReplyDelete