அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்
சிறு வயதுக் கணவொன்றுடன் எதிர்பார்த்திருக்கின்றாள்.
வாசிக்க வேண்டிய செய்திக் கதையை ஒருமுறை வாசித்துக்கொள்கின்றாள்.
மின் விளக்குகள் எரியும், கெமரா தயாராகும்.
முகத்தில் ஒப்பனை நேர்த்தியாக இருக்கும், மனதுக்குள் சமாதானமாகலாம்.
உடையைப் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.
ஆனால், தலை மறைப்பு சரியாக இருக்கின்றதா என்பதை மீண்டும் ஒருமுறை கைகளால் தொட்டு இழுத்து முகத்தின் எல்லையில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
நூர் தகூரி, 21, அமெரிக்க தெலைக்காட்சி சேவையொன்றில் முதன் முறையாக ஹிஜாப் அணிந்து செய்தி வாசிக்கும் தெரிவிப்பாளராகும் இலட்சியத்துடன் முன்னேறும் பெண் ஊடகவியலாளர்.
முஸ்லிம் பெண்கள் தொடர்பாக பிரதான ஊடகங்கள் பரப்பிவரும் பிழையான அபிப்பிராயங்களுக்கு தகுந்த பதிலைக் கொடுக்க வேன்டும் என்ற வேட்கையுடன் முன்வந்துள்ளாள்.
“செய்தி வாசிப்பவராக வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது... இயல்பாகவே கதை கூறும் ஆற்றல் எனக்கு உண்டு” எனக் கூறும் தகூரி, “நான் ஹிஜாபை அணிவேன் என்று கருதியிருக்கவில்லை. இதை அணிந்த பிறகும்கூட செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை. இது என்னைத் தடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை” என்று Huffington Post ஊடகத்திற்கு ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
லிபிய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான நூர் தகூரி, தனது பெயரின் அர்த்தமான ‘ஒளி’யை அடிப்படையாக வைத்து, 2012 முதல் Let Noor Shine (ஒளி பிரகாசிக்கட்டும்) என்ற பெயரில் சமூக ஊடக இயக்கத்தை நடத்துகின்றாள்.
இவ்வியக்கத்தின் மூலம் தனது இலட்சியத்தையும் தன்னைப் போன்ற பலரது இலச்சியங்களையும் பேசுவதற்கு தளமொன்றை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். தகூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் 89,000 வாசகர்கள் இருக்கின்றனர்.
தனது வளர்ச்சியில் தட்டிக்கொடுத்தவர்களை விட தட்டிவிட்டவர்கள் அதிகம் எனக் கூறும் தகூரி, “இன்னும் அவர்கள் இந்த தலைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை, இது எழுச்சிபெறும் தலைமுறை, விடயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, மக்கள் பன்மைத்துவத்தைத் தேடுகின்றனர், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள விரும்புகின்றனர்” என்றார்.
மூலம்: MuslimVillage.com
முதலில் இவரது திறமைக்குப் பாராட்டுக்கள், அடுத்து அமெரிக்கர்களின் தாராள மனநிலைக்குப் பாராட்டுக்கள். அமெரிக்கர்களின் தாராள மனநிலை என்பது, சாதரணமாக இங்கே பள்ளிக்குள் குந்திக்கொண்டு மெளலவியின் பாயான்களை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டு, மற்றவர்கள் குறித்து மனதில் வெறுப்புணர்வுகளை வளர்த்து, மனம் இறுகிப் போனவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அமெரிக்காவில் இருக்கும் கருத்து, தெரிவுச் சுதந்திரம் IS ஆட்சியிலோ, சவூதி அரேபியாவிலோ இல்லை.
ReplyDeleteஅமெரிக்காவில் பராக் ஒபாமா, ஜோர்ஜ் வோசிங்க்டன், போப். ஜீசஸ், முஹம்மத், அல்லாஹ், டிக் சென்னி, ஹிலரி, டோம் ஜோன்ஸ் என்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கழுத்தை அல்ல, நகத்தைக் கூட வெட்ட மாட்டார்கள்.
அடுத்து, ஹிஜாப் அணிந்து செய்தி வாசிப்பது, குறித்த பெண்ணின் தெரிவு சுதந்திரம் சார்ந்தது. இதே செயலை கடும் போக்கு இஸ்லாமிய திணிப்பளர்கள் ஒருபொழுதுமே அங்கீகரிக்கப் போவதில்லை. "செய்தி அறைக்குள் மஹ்ரம் இல்லாமல் இருப்பது ஹராம், அந்நியவர்களுக்கு முகத்தைக் காட்டுவது ஹராம், ஹிஜாபுக்கு வெளியே முன் தலைமுடி தெரிகின்றது, அது நரகத்திட்குரியது, இஸ்லாம் இல்லை" என்றெல்லாம் குமுறத்தான் செய்வார்கள்.
(அமெரிக்காவில் தாராளத் தன்மை இருக்கின்றது என்பதற்காக, நான் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்கப் போகின்றேன், இது எனது மத உரிமை என்று யாராவது வந்தால், ஏதாவது கொமடி ப்ரோக்றேமுக்குத்தான் போடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.)
LITTLE STAR ALLAHWAIYUM, MOHAMMED NABI (SAL) AWARHALAYUM MATRAWARHALUDAN OPPITTU PESUMPOZE, INDA LITTLE STAR YAR ENBAZU PURIYUZU..... "JAFFNA MUSLIM" IWWARANA COMMENTS KALUKKU ANUMAZI KODUKKA KOODAZU.....
ReplyDeletedear aslam,
ReplyDeletejaffna muslimum, intha mokku starum relation pola....
Iverellam oru star endu solli ivarda commenta podra jaffna muslima appa ennendu solrathu?
dear aslam,
ReplyDeletenaan ninaikinren intha puththi ketta star ithavida ellam keeltarama comment
panni iruppar. but perunthanmaya athellam jaffna muslim publish panni irukka maatanga.
allah or mohameth( sal) endru yaarai vendumaanalum vimarsikalamam.
ithai paarthum jaffna muslim ithanai publish saithathu varuthamalikirathu.
SUBHANALLAH.
LITTLE is a VIRSU trying invade amoung Muslims and create groups of wrong openion about Islam. I have many times refuted his comments.. It seems he is not at all supporting Islamic values (many times)
ReplyDeleteIF Jaffnamuslim.com continues to keep any comments that makes attacks on Islamic values.. THEN we have QUESTION about this .com too.