Header Ads



பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம், மைத்திரிபால வரும்வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.  எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை முன்னெடுக்கவிடாது, அவைக்கு நடுவேநின்று கோஷங்களை எழுப்பினர்.  சபாநாயகரின் அறிவிப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கும் போது சபாநாயகருக்கு அறிவிக்கவேண்டும் என்று அறிவித்தார். 

இதனையடுத்து சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. எதிரணியினர் கோஷங்களை எழுப்பியவாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைப்பதை கடுமையாக எதிர்ப்பது மட்டுமன்றி அந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் கோஷமெழுப்பினர். இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பக்கசார்பாக செயற்படுவதாக தெரிகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் உரிய பொறிமுறையொன்றை கையாளவேண்டும். நாட்டுக்கு சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமை பொருத்தமானது அல்ல. அதற்காக வேறு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்கு அழைக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிபாளர் நாயகத்தின் செயற்பட்டுக்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் கையொப்பமிட்டு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானமொன்றை எடுக்கவேண்டும். நல்லாட்சி, நேர்மையானதாகவும் நீதியானதாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காண்பதற்கு முறைமையொன்று இருக்கின்றது.  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தவறாயின் அவர், உயர்நீதிமன்றத்தை நாடமுடியும். மறுபுறத்தில் பார்த்தால் அவர் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி வரும் வரை சபை ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்கு வரும் வரையிலும் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் பிற்பகல் 12.30க்கு நடைபெறவிருப்பதனால் அதுவரையிலும் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.



- See more at: http://www.tamilmirror.lk/144380#sthash.kwgLLZSu.dpuf

1 comment:

  1. What is BIAS is Treating different personal in different way. It is not BIAS rather It is the CORRECT way that the BRIBE commission has the right to call any body they suspect (GOOD and BAD ones) to taking statements and investigation toward a corrupt issue.

    Those who oppose this call... not surprising they all try to protect them self from the Bribes and Crimes they have but shutting the mouth of BRIBERY commission completely.

    We SriLankan should decide one of following, if we are intelligent and look for justice in this country.
    1. Fully support Bribery commission's right to call any one for investigation, regardless of their post, race or colour. If not

    2. Not have Bribery commission in our country and allow all these bullshits go head with their crimes and bribing towards the destruction of this land.

    ReplyDelete

Powered by Blogger.