முஸ்லிம்களுடைய ஆதரவு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலமாக உள்ளது - கபீர் ஹாசிம்
-இக்பால் அலி-
இந்த இலங்கை நாட்டில சிறுபான்மையின மக்கள் வாழ்வதற்கு உகந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். சுpங்கள மக்களுடன் உரிய முறையில் உறவைப் பேணி நடப்பதற்கு ஐக்கி தேசியக் கட்சியாகும். சிங்கள பௌத்த மக்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஐக்கி தேசியக் கட்சியாகும். அதே போல சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழலைக் கொண்டதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சியில் நாங்கள் இவ்வளவு காலமும் இருந்து வந்தோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நெடுஞ்சாலைகள் பாதை அபிவிருத்தி மற்று முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம்ட சம்மேளனக் கூட்டமும் கேகாலை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு க. பொ. த சாதாரணப் பரீட்சசையில் சகல பாடஙகளிலும் ஒன்பது ஏ பெற்ற அதிசிறப்பு சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தல் மற்றும் அமைச்சருடைய 20 வருட அரசியல் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ரிஸ்வி சுபைர் தலைமையில் மாவனல்லை வீனஸ் மண்டபத்தில் 04-04-2015 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹாசிம் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
என்னுடைய அரசியல் வரலாறு 20 வருடங்களைக் கொண்டது. அதில் 18 வருடங்கள் எதிர்கட்சி ஆசனத்தில் இருக்கிறேன். அவ்வாறாயினும் கை விட்டுச் செல்விவ்லை.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுடைய ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பலம் வாய்ந்தவை. அதேபோல மானவனல்லைத் தேர்தல் தொகுதிக்கும் பெரும் சக்தியாகும். ஆனால் இந்தப் பகுதியில் எண்ணற்ற சேவைகள் செய்ய வேண்டும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் செலாளர் என்ற வகையில் பலத்த வேலைப் பலுவுக்கு மத்தியில் தற்போது இருந்து கொண்டிருக்கிறேன். எவ்வாறாயினும் நான் உங்களுடைய தொலைபேசி அழைப்புக்கு பேசுவதற்கு மட்டும் நானில்லை. நீங்கள் அனைவரும் என்னுடைய இதயத்தில் உள்ளீர்கள். நீங்கள் என்னை நம்பலாம். பதவி போனால் எனக்கு வேலை இல்லை. இந்தப் பதவி என்னுடையது அல்ல. இந்த பதவி உங்களால் வழங்கப்பட்டதும் உங்களுடையதுமாகும். உங்களால்தான் இந்தப் பதவிகள் எனக்கு கிடைத்தது. இதை நான் மறக்க வில்லை. நீங்கள் எல்லோரும் எனக்கு வாக்களித்மையினால் நான் அனைவரையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இதை 100 நாட்ளுக்குள் செய்ய முடியாது. இது யாருக்கும் தெரியும்.
இந்த ஆட்சியை உருவாக்கி இருப்பவர்கள் கடந்த கால ஆட்சியில் பெரும் வியாபாரத்துறையில் ஈடுபட்டவர்கள் அல்ல. பொது மக்களை பலம் வாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு சாதாரண நிலையிலுள்ளவர்களே இந்த ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். உங்கள் பிரதேசத்திற்கு சிறந்த பாதை, சிறந்த வைத்தியசாலை, சிறந்த வருமானத்திற்கான வழி, அதேபோல ஒற்றுமையுடன் வாழக் கூடிய சூழல் உருவாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவசரமாக அமைச்சர் தம் பகுதிக்கு வரவில்லை. எம்.மைச் சந்திக்க வில்லை என மனம்வருத்தம் கொள்ள வேண்டாம்.
ஜனாதிபதி மத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப் பிற்பாடு இந்த நாடு பல வரப்பிரசாதங்களைக் கண்டியிருக்கிறது. ஆனால் அவர் வெற்றிபெற விட்டால் என்ன நடந்திருக்கும் எங்களுக்கு என்ன நடந்திருக்கும், உங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். நாம் இந்த வெற்றிக்காக முஸ்லிம் யாவரும் அல்லாஹ்விடம் இரு கையேந்திப் பிரார்த்திக்க வேண்டும். எனக்குக் கொஞ்சம் கால இடைவெளி தாருங்கள். நான் உங்களை மறக்க வில்லை.
எனவே எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பலம் வாய்ந்த கட்சியாக இருந்து பொது மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர் முஸம்மில் , முன்னாள் அமைச்சர் பாரூக், பிரதேச சபை ஐக்கிய கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment