Header Ads



ஆட்சியை கைப்பற்ற முஸ்தீபு..? இவ்வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்..! மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு..!!

இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ் வாரத்திற்குள் வருகிறது.

அத்துடன் பாராளுமன்றத்தில் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படுமா? அல்லது பிற்போடப்படுமா? அல்லது சமர்ப்பிக்கப்பட்டு அதனை அங்கீ கரிப்பதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமா? எனும் கேள்விகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கவுள்ள அதேவேளை பாராளுமன்றம் இவ்வாரம் அதாவது 23 ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படலாம் எனும் தகவல்களும் அரசியல் உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு பல விடயங்களிலும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமக்குள் ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்ற போதிலும் அக்கட்சிகளுக்குள் இருக்கும் சிலர் முரண்பாடானதும், குதர்க்கமானதுமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி ஒருபுறமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அம்மையார் கூட்டிலான சுதந்திரக் கட்சி மற்றொரு புறமும் இதனை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மற்றொரு அணி இன்னொரு புறமும் உறுப்பினர்களைத் திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

இந்த சகலவிதமான இழுபறிகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கும். அதிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அனைவரதும் சுயரூபங்கள் வெளிச்சத்திற்கு வரும். அதன் பின்னர் பொதுத் தேர்தலில் மக்கள் தாம் விரும்பும் தமது தலைமையைத் தேர்ந்தெடுப்பர் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் பத்தொன்பதாவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் மிகவும் உறுதியாகவுள்ளனர். எனினும் பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது மஹிந்த தரப்பின் நிலைப்பாடாக உள்ள நிலையில் 19ம் திருத்தச் சட்டம் நாளை 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத் தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் கட்சியினர் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் 19 மற்றும் 20 ஆம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க தீர்மா னித்திருந்தனர். இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப் படவில்லை என தெரிவிக்கப் படுகிறது.

19வது திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை எனவும், 19வது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படுவதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. எவ்வாறெனினும், நாளை 20ம் திகதி காலை 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் மீண்டும் கட்சித் தலைவர் களுக்கு இடையில் சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.

இந்த சந்திப்பின் போது 19வது திருத்தச் சட்டம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 19வது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணை 20, 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதைப் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

19ஆம், 20ஆம் திருத்தங்கள் சமகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக உள்ளனர். மஹிந்தவின் மீள் எழுச்சி பற்றிய சிக்கல்களால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அதிருப்தியடைய வைக்க விரும்பாத ஜனாதிபதி மைத்திரியும், இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 19வது திருத்தத்தை நிறைவேற்ற ஐ.தே.கவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில் பிரதான இரண்டு கட்சிகளும் கலந்துரையாடி இரண்டு திருத்தங் களையும் ஏக காலத்தில் நிறைவேற்றுவ தென்ற முடிவிற்கு வந்துள்ளன.

திங்கட்கிழமையும், செவ்வாய்க் கிழமையும் 19வது திருத்தம் குறித்த விவாதத்திற்கு சபை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டு, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு நாட்களிலும் விவாதத்துக்காக மொத்தம் பதினொன் றரை மணித்தியாலங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

இரு நாட்களும் விவாதத்தை நடத்தி முடித்துவிட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கவும், அதற்கிடையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் இரண்டையும் ஒரே நாளில் நிறைவேற்ற பிரதான கட்சிகள் இரண்டும் கலந்துரை யாடி இணக்கம் கண்டிருப்பதாக அறியவருகிறது.

பெரும்பாலும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டையும் நிறைவேற்றிக்கொணடதன் பின்னர் மே மாதம் முதல் வாரமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம் தென்படுவதாகவும் கூறப் படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரும் கட்சியின் தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப் பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அலரிமாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அத்துடன் 19வது திருத்தச்சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு புறம்பான வகையில் ஆளும் கட்சி கட்சித் தலைவர்களுக்கு 12 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித் துள்ளார்.

இவ்வாறான முரண்பாட்டு நிலைமை யில் 19வது திருத்தச் சட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப் படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட் டதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவை பழையபடி கடும் போட்டியை எதிர் கொள்ளும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை ஜனாதிபதி மைத்திரி ஒரு சமுகமான அரசாட்சியை செய்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். இதனை அவர் வெளிப்படையாகக் கூறத் தவறினாலும் உள்ளூர தனது ஆதரவாளர்களூடாக தனது நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பெரும் சவாலாகும்.

இதேவேளை 19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

19வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்திக்கொள்வது தொடர்பில் அரசியல் அல்லது வேறும் பேதங்கள் இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டி யுள்ளது. அனைத்து தரப்பினரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரணவின் கையொப்பத்துடன் கூடிய ஆவணமொன்றில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தப் பிரேரணைக்கு மேலதிக தேர்தல் முறையை மற்றும் 20வது திருத்தம் மேற்கொள்ளப்படுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய மாகப் பதிவாகுமென பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர கூறி யுள்ளார்.

19வது திருத்தத்துக்கு இரு பிரதான அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதில்லை. இரு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்க ளிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை 6.2 மில்லியன் 5.7 மில்லியன் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.