Header Ads



மோடியின் மானத்தை கப்பலேற்றிய, பிரான்ஸின் பிரபல நாளிதழ்

மோடிக்கு எதிராக, உலகம் முழுவதிலுமுள்ள நடுநிலையாளர்கள் அவர் செல்லும் நாடுகளில் எல்லாம் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள காவி-கார்ப்பரேட் ஊடகங்கள் அந்தச் செய்திகளை அப்படியே மறைத்து வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விடுகின்றன. 

மோடியின் பிரான்சுப் பயணத்தின் போது அங்குள்ள முன்னணி இதழான 'ல மோந்' (Le Monde) மோடி யின் பாரிஸ் செய்தியை பதிப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது, அது மட்டுமல்லாமல் அது, தான் மறுத்த செய்தியை உலக ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டது.

இந்திய ஊடகங்களைப் போல் உலக ஊடகங்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்து மோடி பிரான்சுக்கு பயணமாகும் சில நாட்களுக்கு முன்பே பிரான்சில் உள்ள இந்தியத்தூதரகம் 'ல மோந்' (Le Monde) என்ற முன்னணி இதழுக்கு, பிரான்சு வரும் மோடியைப் பேட்டி எடுக்க அழைப்பு விடுத்திருந்தது. இதனை அடுத்து 'ல மோந்' இதழும் இந்திய தூதரகத்தின் அழைப்பை ஏற்று மோடியை பேட்டி எடுக்க முடிவு செய்திருந்தது.

அதில் கூறியுள்ளதாவது:

ஊடகத்தின் சுதந்திரம் என்பது முகத்துக்கு நேராக ஒருவரிடம் கேள்வி கேட்டு அதை மக்களிடையே கொண்டு செல்வது ஆகும்.

திரைமறைவில் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு அவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் பதில் அனுப்பி, உண்மை மனநிலையை மக்களிடம் மறைக்கும் செயலை எங்களது செய்தி நிறுவனம் எக்காலத்திலும் செய்யாது. 

இது குறித்து அந்த இதழின் தலைமைச் செய்தியாளர் ஜூலியன் புவிஷோ கூறியதாவது: மோடி முதலில் எங்களது கேள்விகளைப் படித்துப் பார்த்து பிறகு அவருக்குத் தேவையான கேள்வி களுக்கு மாத்திரம் பதிலளிப்பார் என்று தெரிவித்திருந்தனர்.

அப்படி ஒரு பேட்டி எங்களுக்குத் தேவையில்லை. செய்தியாளர் என்ற நிலையில் மக்களிடம் நேரிடையாக உண்மை நிலையைக் கூறுவதுதான் எங்கள் வேலை, ஆனால் விளம்பரதாரர் நிகழ்ச்சியைப் போல் நடத்த மோடி எங்களைக் கேட்டுக் கொண்டார்.

அது பெய்ட் நியூஸ் (பணம் கொடுத்து செய்தி பதிக்கும்) நிறுவனங்கள் செய்யும். நாங்கள் பணம் கொடுத்து செய்தி பதிக்கும் வணிகத்தைச் செய்யவில்லை என்று கூறினார். மேலும் மோடியின் டுவீட்டர் வலைதளத்திலும் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார். மோடி பிரதமரானது முதல் இன்று வரை இந்திய ஊடகத்திற்கு தனிப்பட்ட முறையில் பேட்டியளித்ததில்லை.

அதே நேரத்தில் நேபாளத் தில் சுற்றுப்பயணம் செய்த மோடி அங்குள்ள கோவிலுக்குச் சென்றார். அவரைப் பார்க்க வந்த பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது கொடுத்து அனுப்புங்கள் என்று கோவில் நிர்வாகத்திடம் கூறி இழிவுபடுத்தியதும், அதையும் கண்டு கொள்ளாமல் துடைத்துவிட்டு இன்று 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நியூயார்க் டைம்ஸ் வரை பேசப்படும் போது இங்குள்ள வட இந்திய ஊடகங்கள், மோடியின் அயல்நாட்டுப் பயணத்தை 24- மணி நேரமும் ஒளி பரப்பிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதுதான் பிரான்ஸ், அதனால்தான் அந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் வாழ்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.