ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை, மேலோங்க செய்யவேண்டும் - அம்பாறையில் ரணில்
எதிர் வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய கட்சியாக மிளிரும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகவின் அழைப்பின் பெயரில் ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதம ரணில் விக்ரம சிங்க அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வை அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். பிரதம ரணில் விக்கிரம சிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேலோங்க செய்ய வேண்டும் அந்த வகையில் எதிர் வரும் பொது தேர்தலை முன்னிட்டு நாங்கள் எல்லோரையும் அரவனைத்து செல்ல வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக வேண்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கியதில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் படி 100 நாள் வேலை திட்டத்தின் பொருட்கள் , எரிபொருள் விலை குறைப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பவற்றையும் வழங்கியுள்ளோம்.
1977 ம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார முறை நாட்டிற்கு கொண்டு வந்த நாம் ஆறு மாத காலத்திற்குள் நிறை வேற்று முறையையும் கொண்டு வந்தோம் என்றார்.
Post a Comment