விஷேட இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு
- யு.எல். அலி அஷ்ரஃப் ஆல் சூரி-
கருத்து வேறுபாடுகள் எனும் சக்கரத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுகம் பல வெறுக்கத்தக்க பாத்திர வடிவமைப்புக்குள் பலி எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பது எமது சமுகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல, கருத்து வேறுபாடுகள் என்பதை ஆயுதமாய் பயன்படுத்தி ஒரு வேறுபாட்டு போர்க்களம் தற்போது இஸ்லாமிய சமுகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கருத்து வேறுபாடுகள் கலக்கம் நீக்கி தெளிவை தந்து ஒற்றுமையை ஒளிபாய்ச்ச வேண்டும் என்பதே எமது மூதாதைகளான சஹாபாக்கள் எனும் நட்சத்திரங்களின் கொள்கையாகும். அதுவே இஸ்லாமிய சமுகத்தை காத்திரமான பாதுகாப்புக்குள் பக்குவப்படுத்தும்.
எனவே எமக்குள் எழும் கருத்து வேறுபாடுகள் எவ்வாறு நோக்கப்பட்டு எந்த வழிமுறையினூடாக உண்மைகளை ஒற்றுமைப்படுத்தலாம் என்பதை தெளிவு படுத்தும் ஒரு விஷேட சொற்பொழிவு இலங்கையில் இருந்து வருகை தந்துள்ள பிரபல மார்க்க அறிஞரும் ஸஹ்வா இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க். ஐ.எல்.எம். ஹாசிம் அஸ் சூரி (மதனி) அவர்களால் இன்ஷா அல்லாஹ் நாளை 20.04.2015 திங்கட் கிழமை இரவு 8.00 மணிக்கு கட்டார் நாட்டின் பனார் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் ஸனஇய்யாக் கிழை கட்டடிடத்தில் நடைபெற, இலங்கை தஹ்வா நிலையம் கட்டார் நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.
எனவே கட்டார் நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய நெஞ்சங்கள் தவறாது இந் நிகழ்ச்சியில் கலந்து பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.
இந் நிகழ்ச்சிகள் றறற.ளடனஉஙயவயச.ழசப எனும் இணையத்தள மூலமாக உலகமெங்கும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
Lot of Dawa activities in Qatar recently with galaxi of Muslim scholars .
ReplyDeleteMashallah
Golden opportunity for our expatriate brothers earning& learning .
Dont waste your valuble time in chatting & facebook rubbish .
Spend your time with spiritual acitivities.