'ரணில் விக்ரமசிங்கவிடம் இலஞ்சம், மோசடி பற்றிய விசாரணை செய்யவேண்டும்'
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்துவதற்கு முன்னர் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு பிரதமரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வீரவன்ச இதனை கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொள்ளவில்லை.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. சபை ஒத்தி வைக்கப்படும் வரை அவர் சபையில் இருந்தார். அதன் பின்னர் எங்கு போனார் என்று தெரியவில்லை.
அவர் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், அவர் எம்மை பற்றி பார்க்க வேண்டும்.
அவர் உண்மையான எதிர்க்கட்சித் தலைவரல்ல. அவர் அரசாங்கத்தின் ஒப்பந்தகாரர். அவர் அரசாங்கத்தின் உப ஒப்பந்தகார் என குமார் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment