யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை, அழைத்துவரும் திட்டம் தோல்வி
யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இன்றைய தினம் முன் எடுக்கப்படவிருந்த வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமனில் சிக்கியுள்ள 50 இலங்கையர்கள் இன்று சீன வானுர்தி மூலம் பஹரேன் அழைத்து செல்லப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், யேமனில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் வானுர்தி பயணிக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வான் வழியூடாகவோ? அல்லது கடல்மார்க்கமாகவோ, உடனடியாக அண்மித்த நாடொன்றுக்கு இலங்கையர்களை அழைத்து செல்வதே தமது நோக்கம் என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
சர்வதேச இன்னல்களின் போது, ஏனைய நாடுகளின் பிரஜைகளை மீட்பதற்காக சீனா தலையீட்டை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது நோக்கதக்கது.
பாகிஸ்தான், எத்தியோப்பியா, இத்தாலி, ஜேர்மன், போலந்து, அயர்லாந்து, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் யேமனில் சிக்குண்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை மீட்டுத்தருமாறு சீனாவின் ஒத்துழைப்பை கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment