'கிறிஸ்தவர்களை பழிவாங்காதீர்கள்' - பாப்பரசர்
வத்திக்கானில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில், பாரம்பரிய ஈஸ்டர் செய்தியை வெளியிட்ட பாப்பரஸர் பிரான்ஸிஸ், உலகெங்கும் பல தடவைகள் நடந்த, ''கிறிஸ்தவர்கள் பழிவாங்கப்படும் நிகழ்வுகள்'' முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரினார்.
மத்திய கிழக்கிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் நடக்கும் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிய, உலகின் 102 கோடி கிறிஸ்தவர்களின் ஆன்மீக தலைவரான பாப்பரசர், உருவாகியுள்ள இரானின் அணுத்திட்டம் குறித்த ஒப்பந்தம் உலகை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
தனது உரைக்கு முன்னதாக சதுக்கத்துக்குள் நுழைந்த பாப்பரசர், அங்கு மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது காத்திருந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். bbc
Post a Comment