முஸ்லிம் சகோதரியிடம் நூதன முறையில் திருட்டு - திகனயில் சம்பவம்
கண்டி திகன நகரில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணொருவரிடம் நூதன முறையில் பெறுமதியான நகையை இருவர் திருடி பறித்து விட்டு தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.
திகன நகரில் வீதியில் இரண்டு இலட்சம் பெறுமதியான நகையை அணிந்து நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 65 வயது பெண்னை தொடர்ந்து வந்த இருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்பெண்ணின் கையில் இருந்த பையை காட்டி "நாங்கள் ரகசிய குற்ற விசாரணை பிரிவை சேர்ந்தவர்கள், உங்கள் பையில் சட்டவிரோதமான பொருள் ஒன்று உள்ளது. அதனை நீங்கள் மறைத்து எடுத்துச் செல்கின்றீர்கள் உங்களை விசாரிக்க வேண்டும்" என கூறி மடவளை - திகன வீதியில் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்துக்கு கூட்டி வந்துள்ளனர்.
அங்கு வந்து மறுபடியும் "நீங்கள் பையில் எடுத்துச் செல்லும் பொருள் சட்டவிரோதமானது என கூறியுள்ளனர். அதனை அப்பெண்மணி மறுத்த போது " நாங்கள் உங்களை நம்பத் தயாரில்லை, நம்ப வேண்டுமென்றால் உங்களிடம் உள்ள பெறுமதியான பொருள் ஒன்றை இந்த அரிசியில் வைத்து சத்தியம் செய்யவும்" என அவர்களிடம் இருந்த அரிசி பெக்கட்டை கையில் வைத்துள்ளனர். இதனை நம்பிய அப்பெண்மணி தனது நகையை (மாலை) கழற்றி அதில் வைத்து சத்தியம் செய்த போது அதனை எடுத்துக் கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண்ணின் சத்தத்துக்கு அங்கு பொதுமக்கள் வந்தபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் இது போன்ற நூதன திருட்டுக்களில் இருந்து பொதுமக்கள் மிக அவதானமாக ஃ எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரித்தியுள்ளனர்.
Allah meethu sathiyam seiwatai vittu vittuuuu, arice packet mella sathtiyam senja eppidithan nadakkum..... be careful
ReplyDeleteதடிமனும், காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்.
ReplyDeleteஉங்கள் வீட்டு 65 வயது பெண்மணி தனியாக வீதியில் செல்லும் பொழுது இப்படி நிகழ்ந்தால், ரோட்டில் நின்று ஏகத்துவமா பேசிக்கொண்டு இருப்பீர்கள்?