எதிரிகள் யாராவது டில்லியை, அணு ஆயுத ஏவுகணை மூலம் தாக்கினால்..?
எதிரிகள் யாராவது டில்லியை அணு ஆயுத ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினால் அதை இடைமறித்து செயல் இழக்கச் செய்யும் 'கவச' தடுப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அணு சக்தி துறையில் பல்வேறு முன்னேற திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக டில்லி நகரை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்திட ஒரு தடுப்பு சாதனம் அமைக்கும் பணியை துவக்கியிருக்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார் நிறுவப்படும். ஏதாவது அணுஆயுத ஏவுகணை வானில் வந்தால், 800 கி.மீ., துாரத்திற்கு அப்பால் வரும்பேதே அதை கண்டறிந்து, ஏவுகணையை செயல் இழக்கச் செய்யும். இதை மேலும் மேம்படுத்தி, ஏவுகணையை 5 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு அஅப்பாலேயே கண்காணித்து செயல் இழக்க செய்ய முடியும்.
இதற்கான பணிகள் வரும் 2016 ல் முடிவடையும். டில்லியில் நிறுவப்பட்டதும் அடுத்து மும்பையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
முக்கிய நகரங்களில் டில்லி: இது போன்று அணுஆயுத தடுப்பு சாதனம் வாஷிங்டன், பாரீஸ், பெய்ஜீங், லண்டன், டெல் அவிவ் ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளது. உலக அரங்கில் இது போன்ற பாதுகாப்பு உடைய நகரங்களில் டில்லியும் ஒன்றாக அமைகிறது.
அணு ஆயுத ஏவுகணை தடுப்பு திட்டம் 2006 ல் துவங்கப்பட்டது. 2013- 14ல் சுணக்கமானது. மோடி அரசு பொறுப்பேற்றதும் இது போன்ற அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களை பட்டை தீட்ட களம் இறங்கியிருக்கிறது.
Post a Comment