Header Ads



மஹிந்தவின் பாதுகாப்பை உறுதி செய்வதாக, மைத்திரி எழுத்தமூல உறுதி வழங்கும்வரை பாராளுமன்றத்தில் போராட்டம் தொடரும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறுதி செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூல உறுதிமொழி வழங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த உறுதி மொழி வழங்கப்படும் வரையில் பாராளுமன்றில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என போராட்டம் நடத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி மகஜர் ஒன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்படைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் உறுதி மொழி வழங்க வேண்டுமென அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 24ம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

எனினும், இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ளக் கூடாது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மைத்ரியின் தலைக்கு வந்துள்ள பரீட்சை..... மைத்ரி அடிபணிந்தால், அடுத்து கதிரையை கவிழ்க்கும் நடவடிக்கைக்கு மகிந்த பிள்ளையார் சுழி போடுவார்.

    ஜே ஆர் போன்று உறுதியும், தந்திரமும் உள்ள ஒருவரால் மட்டுமே இப்படியான சந்தர்ப்பங்களில் பந்தை திசை மாற்றி அடிக்க முடியும். பார்ப்போம், மைத்திரி என்ன செய்கின்றார் என்று.

    ReplyDelete
  2. கல்லணை வேள்ளனாக்குவதே இந்த நாட்டின் தலை எழுத்து கோடி கொடியை கலவேடுத்தவனுக்கு பாதுகாப்பு கொடுக்கச்சொள்ளும் ஒரே நாடு இலங்கைதான் பக்கத்து நாடு இந்தியாவில் ஆளும் கட்சி இருக்கும் போதே பிடித்து உள்ளே போடுகிறார்கள் யார் யாரெல்லாம் மஹிந்தைக்கு ஆதரவு தெரிவிக்கானோ அவேனல்லாம் கள்ளன்தான் ஜன நாயக நாடு என்று சொல்லுவேதர்க்கே வெட்கக்கேடு

    ReplyDelete

Powered by Blogger.