யேமனை நோக்கி அமெரிக்க, ஈரானிய போர் கப்பல்கள் விரைவு
யெமனில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு கடற்பகுதிக்கு அருகில் அமெரிக்க கடற்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா அந்த பகுதிக்கு மேலும் ஒரு விமான தாங்கி கப்பல் மற்றும் வழிகாட்டி ஏவு கணை யுத்த கப்பலை அனுப்பியுள்ளது.
யெமன் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானிய கப்பல்கள் ஆயுதங்கள் கொண்டுசெல்வது குறித்து கண்காணிக்கவே அமெரிக்கா அந்த கடற்பகுதியில் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகி ன்றன. இதில் அமெரிக்காவின் யு.எஸ். எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் விமான தாங்கி கப்பல் மற்றும் அதற்கு பாது காப்பாக யுத்த கப்பல் ஒன்றும் அனு ப்பப்பட்டதாக அமெரிக்க கப்பற்படை கடந்த திங்கட்கிழமை உறுதி செய்தது.
எனினும் யெமனுக்கு ஆயுதம் கொண்டு செல்லும் ஈரானிய கப்பல்களை தடு த்து நிறுத்தவே அந்த கடற்பகுதியில் அமெரிக்கா பாதுகாப்பை பலப்படுத்தி யதாக வெளியான செய்தியை அது மறுத்துள்ளது.
பிராந்தியத்தில் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்பை உறு திப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி இந்த கடற்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க கப் பல்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. இங்கு சுமார் 2,200 கட ற்படையினர் நிலைகொண்டுள்ளனர்.
ஈரானின் ஏழு கப்பல்கள் அறியப்ப டாத சரக்குகளை ஏற்றிக்கொண்டு யெமனை நோக்கி பயணிப்பதாக செய்திகள் வெளியான நிலையிலேயே அமெ ரிக்கா மற்றுமொரு கப்பலை யெமனுக்கு அருகில் நிறுத்தியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
டெஹ்ரானில் இருந்து ஹவ்திக்களுக்கு ஆயுதங்களை கொண்டுசெல்லும் கப்பல்கள் தொடர்பில் தெரியவந்திருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோஷ் ஏர்னஸ்ட் குறிப்பிட்டார். "யெமன் ஹவ்திக்களுக்கு ஈரானியர் ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது குறித்த ஆதாரங்கள் எமக்கும் கிடைத்துள்ளன" என்று எர்னஸ்ட் குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பரில் யெமன் தலை நகர் சனாவை கைப்பற்றிய ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசை செயலிழக்கச் செய்தனர். தற்போதும் நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றி வரும் ஹவ்திக்களுக்கும் அந்நாட்டு ஜனா திபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் ஆதரவு படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகிறன.
இதில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத் தும் சவ+தி அரேபியா தலைமையிலான பிராந்திய கூட்டணி நாடுகளுக்கு அமெ ரிக்கா உளவுத்துறை ஒத்துழைப்பு களை வழங்கி வருகிறது.
சவூதி அரேபியாவும், கூட்டமைப்பும் தமது கையாலாகத் தனத்தை உணர்ந்து வான் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டன.
ReplyDeleteபெரிய வீர வசனங்கள், "ஷியா - சுன்னி" யுத்தம், இஸ்லாத்தை காக்கும் யுத்தம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தோல்வி. கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது போன்று ஒரு அறிக்கை மட்டும்.