ரணிலின் மூக்கு உடையுமா..? நிம்மதியின்றி தவிக்கும் சபாநாயகர், எச்சரிக்கும் சோபித தேரர்
-நஜீப் பின் கபூர்-
செங் கடலில் மர்மமான இரு இலங்கை ஆயுதக் கப்பல்கள்
தற்போது உள்நாட்டில் எவன் கார்ட் ஆயுத விவகாரம் பாரிய சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்ற போது உக்ரைன் , நைஜீரியா போன்ற நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு இலங்கையிலிருந்து ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது என்ற புதிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது செங்கடலில் இருக்கின்ற இலங்கையின் இரு கப்பல்களில் ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. செங் கடலில் எகிப்திற்கு அண்மையில் இரு கப்பல்கள் தற்போது நடமாடி இருக்கின்றது.
இதில் ஜெத்தா துறை முகத்திற்கு அண்மையில் MV ALPHONSA என்ற கப்பல் தற்போது நங்கூரமிட்டிருக்கின்றது. இந்தக் கப்பல்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோக்கிக்கப் பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பிட்ட இரு கப்பல்களிலிருந்து இந்த ஆயுதங்களைக் கையாள்கின்ற போது இது வரை 15 பேர் வரை இதில் மண்டு போயிருக்கின்றார்கள் என்றும் ஒரு தகவல் குறிப்பிடுகின்றது.
தற்போது இந்த விவகாரங்கள் பாதுகாப்புத் துறையினரால் ஆழமாக விசாரிக்கப்பட்டு வருவதுடன் இது சர்வதேச மட்டத்திலும் தற்போது தேடப்பட்டு வருகின்றது.
அரசைக் கடுமையாக எச்சரிக்கும் சோபித தேரர்
ஆளும் அரசை தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றார் மாதுலுவாவே சோபித தேரார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்ஹவின் நடவடிக்கைகள் விடயத்தில் அவர் தற்போது கடும் கோபத்தில் இருக்கின்றார்.
மைத்திரியின் நல்லாட்சியைக் குழப்பியடிக்கின்ற வேலைகளில் தற்போது ரணில் ஈடுபட்டு வருகின்றார் என்று அவர் குற்றம் சாட்டுகின்றார். தேர்தல் முறையில் மாற்றங்கள் என்ற விடயத்தில் ரணில் முரண்பாடாக நடந்து கொள்வது தேரரின் கடும் கோபத்திற்கு அடிப்டைக் காரணமாக அமைந்திருக்கின்றது. ரணில் ஒரு சந்தர்ப்பவாதியாக நடந்து கொள்வதாக தேரர் கருதுவதால் இந்த முரண்பாடு என்று தெரிகின்றது.
நிம்மதியின்றித் தவிக்கும் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ
வருகின்ற 7 ம் திகதி பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்ற விடயத்தில் தான் ஒரு தீர்க்;மான முடிவைத் தருவதாக குறிப்பிட்ட சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ தற்போது பிரித்தானியப் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தொடர்பான நூல்களை இரவு பகலாக தூக்கமின்றி படித்துக் கொண்டிருப்பதாக, சபாநாயாகரின் உத்தியோகபூர்வமான இருப்பிடத்திலிருந்து எமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றது.
வேடிக்கை என்னவென்றால் தற்போது இலங்கையில் இருக்கின்ற பாராளுமன்ற நிலமை தொடர்பாக எந்த நாட்டிலும் முன்னுதராணங்கள் இல்லாமல் இருப்பது தெரிய வருகின்றது.
எனவே இலங்கை பாராளுமன்றத்திற்கே உரிய ஒரு தீர்வைத்தான் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கொடுக்க வேண்டி இருக்கின்றது - இருக்கும். இதுதான் இதற்குப் பின்னர் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் இது விடயத்தில் பல அரசியல்வாதிகளையும் சந்தித்திருந்தார்-கருத்துக் கேட்டார்.
அத்துடன் சட்டவல்லுணர்கள் பலரிடம் அவர் இது பற்றி ஆலோசனைகளை கேட்டபோது எவரும் உருப்படியான ஆலோசனையை அவருக்கு வழங்கவில்லை என்று தெரிகின்றது.
எனவே 7 ம் திகதி ஒரு உப்புச் சப்பில்லாத தீர்வைக் கொடுப்பார அல்லது ரி.என்.ஏ.க்கு பந்தை மாற்றி சிங்கள மக்களின் எதிர்ப்பை அரசின்பால் திருப்பிவிடுவாரா என்று தெரிய வில்லை. என்றாலும் ஜனநாயக ரீதியில் ரி.என்.ஏ.க்கு இந்த எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை பெற பூரண உரிமை இருக்கின்றது.
சந்திரிகா - மஹிந்த சந்திப்பு !
வருகின்ற ஏப்ரல் 10ம் திகதி ஹொரணை நகரில் முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றார். இந்தக் கூட்டத்திற்கு சுதந்திரக் கட்சியின் நலன் பேணுபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள்; ஜனாதிபதிகளான சந்திரிக்கா - மஹிந்த வருவார்களா சந்திப்பு நடக்குமா? கட்சி நலன்கள் பேணப்படுமா? என்பதனைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஹொரனைக் கூட்டம் தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகின்றது. ரத்னசிரி முயற்சி வெற்றியா தேல்வியா 10 ம் திகதி வரை பொறுத்திருப்போம்.?
ரணில் ஒரு சதிகாரன் சாடுகின்றார்- சம்பிக்க
தற்போது பிரதமராகவுள்ள ரணில் விக்கிரமசிங்ஹ பெரும் சதிகாரனாக நடந்து கொள்கின்றார். ஜனாதிபதியின் அதிகாரங்களை தனது கரங்களுக்கு எடுத்துக் கொண்டு ஒரு சார்வாதிகாரியாக வர அவர் தற்போது முனைந்து கொண்டிருக்கின்றார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தனக்குத் தேவையான விடயங்களை மட்டுமே அவர் தனது தேவையாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
பலர் இருக்கின்ற இடங்களில் ஒன்றைக் கூறுகின்றார். ஒரு தீர்மானத்தை எடுக்கின்றார். பின்னர் அதனை மாற்றித் தனக்குத் தேவையான வகையில் முடிவுகளை எடுத்துக் கொண்டு அதனை சட்டமாக்கிக் கொள்ள அவர் முனைகின்றார். எனவே இது ஒரு சதிகாரன் பார்க்கின்ற வேலை. எனவே இதற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம்.
வருகின்ற 10ம் திகதி ரணில் முன்வைக்கின்ற 19 வது திருத்தப் பிரேரணையை நிச்சயம் நாம் தோற்கடிப்போம், என்பதனை உறுதியாகக் கூறுகின்றோம். இது ஐ.தே.க செயற்குழு அல்ல என்பதனை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். ரணிலின் நடவடிக்கைகளினால் அளும் தரப்புக்குள்ளும் கடுமையான மோதலகள்; தற்போது ஏற்பட்டிருக்கின்றது. எனவே எமக்குத் தெரிகின்ற கணக்குப்படி 19வது திருத்த விடயத்தில் ரணில் மூக்குடைபடப் போகின்றார். அல்லது இரகசிய வாக்கெடுப்பு என்று ஒன்றைக் கோரி பாராளுமன்றத்திலுள்ள ராஜபக்ஷ விசுவாசிகளின் உதவியுடன் இந்த விடயத்தில் ஒரு குழப்பத்தை ரணில் ஏற்படுத்தவும் இடமிருக்கின்றது.
Post a Comment