ரவூப் ஹக்கீமுடன், ஒரு பிரத்தியேக நேர்காணல்
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் ஜப்னா முஸ்லிம் இணையம் குறுகிய நேர் காணலொன்றை (19-04-2015 அன்று இரவு நேரம்) மேற்கொண்டது. இதன்போது நாம் ரவூப் ஹக்கீமிடம் கேட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும்..!
தேர்தல் மறுசீரமைப்பு குறித்தும், அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தும் கவலையடைகிறோம். ஆனால் முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்ற கட்சியின் தலைவரென கூறிக்கொள்ளும் நீங்களோ அல்லது முஸ்லிம் காங்கிரஸோ இவ்விடயம் குறித்து எவ்வித அசைவுமற்று காணப்படுவது ஏன்..?
ஞாயிற்றுக்கிழமை அதாவது 19 ஆம் திகதி நான் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தேன். தேர்தல் மறுசீரமைப்பானது எந்தவிதத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தகூடாது என அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்தேன். முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு விடயமாயினும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் ஜனாதிபதியிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்.
இதற்கு மேலதிகமாக சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் அடங்கிய கூட்டமொன்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நானும் பங்குகொண்டேன். எத்தகைய தேர்தல் முறை கொண்டு வந்தாலும் பரவாயில்லை. இதன்போது முஸ்லிம்களுக்கோ அவர்கள் பெற்றுவரும் பிரதிநிதித்துவத்திற்கோ பாதிப்பு வரக்கூடாதென்பதே எமது நிலைப்பாடு. இவ்விடயத்தில் சகல சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டிருப்பது ஆரோக்கியமானது. நாங்கள் விரைவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடுவோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்களா..?
சனிக்கிழமை, 18 ஆம் திகதி கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தது. தேர்தலுக்கு முகம்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வீர்களா..?
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேருவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இதுதொடர்பில் கொள்ளையளவில் உடன்பாடு கண்டுள்ளோம். ஆரம்பக்கட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தனித்து போட்டியிடுவது பற்றியும் ஆராய்கிறோம். எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன.
ரவூப் ஹக்கீம் எங்கு போட்டியிடுவார் என்ற பெறுமதியான கேள்விக்கு உங்களின் பதில் என்ன..?
(சிரிக்கிறார்) இதுவரை தீர்மானிக்கவில்லை. இறுதிநேர கள நிலவரங்களே அதற்கு பதில் கூறும் என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம் பிரதிநிதித்துவம், கட்சியின் தீர்மானம், உள்ளிட்டவைகளை ஆராயந்த பின்னரே இதுபற்றிய இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வேன்.
வானத்தில் இருந்து வந்தாவது, தான் இம்முறை எம்.பி. ஆகுவேன் என பஸீர் சேகுதாவூத் கூறியுள்ளாரே..?
எவருக்கு வாய்ப்பு கொடுப்பது, கொடுக்காமல் இருப்பது என்பது பற்றியெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆனால் நாங்கள் வாய்ப்பு கொடுப்போம். கட்சியில் கட்டுப்பாடுகள் அவசியம். யாரையும் தள்ளி வீழ்த்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாரில்லை. கட்சியின் ஒற்றுமை சீர்கெடாமல் பாதுகாப்பதே இங்கு பிரதானமானது. அதற்கு ஏற்றவகையில் காய்களை நகர்த்துவோம் எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு பிறகு இந்த தலைமைத்துவத்தை பெரும்பாலும் வழிநடத்தியவர் இந்த பசீர் சேகு தாவுது தான். தற்போதைக்கு காங்கிரசின் நிலைமை மக்களிடத்தில் எப்படி என்றால் மூக்கோடுது என்பதற்காக மூக்கை அறுத்து எறியலாமா? என்ற நோக்கோடுதான் யோசிக்கிறார்கள். எனவே இந்த தரகு வேலை பார்த்து முஸ்லிம்களின் உரிமையை வியாபாரம் செய்பவர்களுக்கெல்லாம் இடம் கொடாது. உறுதியான முடிவை எடுத்து முஸ்லிம்களின் உரிமைக்காக எதிர்கட்சி அரசியல் செய்யவும் தயாராக வேண்டும் காங்கிரஸ் தலைமை. அநேகமான முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் சுயநலக் கும்பலாகவே உள்ளனர். எனவே நல்ல திறமை உள்ள சுயநல மற்ற புதியவர்களுக்கு இடம் கொடுக்கப் பட வேண்டும்.
ReplyDeleteதலைவர் அஷ்ரப் அவர்களுக்கு பிறகு இந்த தலைமைத்துவத்தை பெரும்பாலும் வழிநடத்தியவர் இந்த பசீர் சேகு தாவுது தான். தற்போதைக்கு காங்கிரசின் நிலைமை மக்களிடத்தில் எப்படி என்றால் மூக்கோடுது என்பதற்காக மூக்கை அறுத்து எறியலாமா? என்ற நோக்கோடுதான் யோசிக்கிறார்கள். எனவே இந்த தரகு வேலை பார்த்து முஸ்லிம்களின் உரிமையை வியாபாரம் செய்பவர்களுக்கெல்லாம் இடம் கொடாது. உறுதியான முடிவை எடுத்து முஸ்லிம்களின் உரிமைக்காக எதிர்கட்சி அரசியல் செய்யவும் தயாராக வேண்டும் காங்கிரஸ் தலைமை. அநேகமான முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் சுயநலக் கும்பலாகவே உள்ளனர். எனவே நல்ல திறமை உள்ள சுயநல மற்ற புதியவர்களுக்கு இடம் கொடுக்கப் பட வேண்டும்.
ReplyDeleteகட்சியின் கட்டுக்கோப்பு முக்கியம் என்கிறீர்களே பசீர் கடந்த காலங்களில் மீறினாரா இல்லையா என்று சொல்லவில்லையே..
ReplyDeleteநான் இதனை வாசிக்கவில்லை, வாசிப்பதில் பயனில்லை.
ReplyDeleteLittle star .nice joke and good decision
ReplyDelete