Header Ads



பஸில் ராஜபக்ஷ எதற்காக இலங்கை வந்தார் தெரியுமா..?

சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும்  (வி.ஐ.பி), வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது.

விமான நிலைய வளாகத்தில் இருந்த மஞ்சள் பூக்கள் பூக்கும் மரத்தின் கிளையில் ஏறியிருந்த போது அவருக்கு பிரித் நூல் கட்டப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச்சேர்ந்த பிரபல்யமானவர் என்றபோதிலும் அவரை வரவேற்பதற்கு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

6 comments:

  1. சட்டத்தை மதிக்கும் குடிமகனா? இல்லை மிதிக்கும் குடிமகனா? அண்ணன் ஆட்சியில் இருக்கும் போது சட்டத்தை மதித்திருந்தால் ஏன் நாட்ட விட்டு ஓடணும் ஏன் இந்த விசாரணை வந்திச்சி . இனன்னமும் மக்களை மடயனாக்கதான் பாக்கிறிங்க. எல்லோரும் இருக்கும் வரைதான் வாள் ஆட்டுவாங்க என்பது இப்பவாச்சிலும் மன்டையில படனும். ஆட்சியில இருந்திருந்தா எத்தனை MP , MINISTER வந்திருப்பாங்க

    ReplyDelete
  2. நாட்டில் எதோ நடக்குது, இராணுவத்தில் ஏதாவது இரகசிய நடவடிக்கைகள் நடக்கின்றதா என்று ஒரு கண் வைப்பது நல்லது.

    நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தின் சில பிரிவினரின் ஆதரவு இன்னுமும் மகிந்த தரப்பினருக்கு உள்ளது. பெரும்பான்மை சிங்கள மக்கள் அதிகமானவர்கள் மகிந்தவை குறை சொல்வதை தவிர்த்தே வருகின்றனர், எதுவும் நடக்கலாம்.

    ReplyDelete
  3. When a disaster like Tsunami strikes , people of common sense run for safety. But
    in our country many who got killed were those who ran to the beaches to watch the
    deadly waves. It's the same kind of crowd that have turned up to welcome this
    former minister facing bribery and corruption charges. What a country of jokers !

    ReplyDelete
  4. @muzammil, what ever you tried to say, you have bought up a completely wrong example. Whe Tsunami hit the shore of Sri Labnka, nobody runs to see the tsunami. Most of those who died were either they were at home or they were traveling for various reasons by the coastal ways, including for holiday. I am a Sri Lankan, and I was in the middle of the seen and I was involved with rebuilding program for next 4 years all over the affected areas, but nobody never said that anybody got killed for running to see the beaches. Sorry, you have typed wrong information.

    ReplyDelete
  5. reading Tamil news sites and commenting with English!
    you guys(Muzammil and little star) trying to prove that you guys know English.
    ச்சீ.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் நோக்கம் என்ன? publicity தானே?

    ReplyDelete
  6. @Muzammil, இந்தப் பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் என்றால், நீங்க பிச்சை எடுத்த பொழைக்குறீங்க? உங்கள் கொமன்ட் கூட முதல் பாதி இங்கிலீசில் தானே இருக்கு? அப்போ நீங்க பார்ட் டைம் பிச்சைக் காரரோ?

    ReplyDelete

Powered by Blogger.