ரணில் விக்ரமசிங்கவை குழப்பும் வகையில் கேள்விக்கேட்ட போது..! சந்திரிக்கா
“இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள்” என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது வெறுமனே பகிடியாகும். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
துபாயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்திய ஊடகம் ஒன்றிடம் சந்திரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவை குழப்பும் வகையில் கேள்விக்கேட்ட போது தமது வீட்டுக்குள் தேவையற்றவர்கள் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு அதிகாரம் உண்டு என்று ரணில் கூறியுள்ளார்.
இது வெறுமனே நகைச்சுவையாக கூறப்பட்ட விடயம் என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்துடன் இலங்கை சிறந்த நல்லுறவை பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவை பற்றி குறிப்பிட்டுள்ள அவர் எந்த நாடும் இலங்கையை பயன்படுத்தி இலாபம் பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
Post a Comment