Header Ads



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மஹிந்தவின் வீட்டுக்கு செல்லவுள்ளது - சபாநாயகருடனான பேச்சில் இணக்கம்

இலஞ்ச ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி நேற்று மாலை சபாநாயகர் சமல் ராஜபச்சவுடன் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்காக அழைக்கப்பட்டது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது மகிந்தராஜபக்சவை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு அழைப்பதற்கு பதிலாக ஆணைக்குழுவினர் முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பின்னர் அவைக்கு வந்த சபாநாயகர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். இன்று சபையில் இந்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக தனது முடிவை அறிவிக்கும் வரை தாங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. Protesting to REFUSE the right of JUSTICE in the country.

    Sham of the CITIZEN who elected these bulls.

    ReplyDelete

Powered by Blogger.