Header Ads



நான் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகினேனே தவிர, டெலிபோன் ஒபரேட்டராக ஆகவில்லை - கபீர் ஹாசிம்

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது மற்றும் 19வது திருத்தம் தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சம்பந்தமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிமுடன் பத்திரிகையான சிலுமினவில் இடம்பெற்ற நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி: எமக்கு இதற்கு ஒரு சிறிய பதிலைத் தாருங்கள். அதாவது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஒவ்வொரு மேடையாக நீங்கள் ஒவ்வொருவரும் சத்தமிட்டுச் சொன்ன அந்த ஊழல் மோசடிக்காரர்களைக் கைது செய்ய இப்போது செல்லும் முறையின் கீழ் இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்: அதற்கு தேவைப்படும் நாட்கள் பற்றி என்னால் கூற முடியாது. இது இந்நாட்டின் நீதிமன்றம் உள்ளிட்ட சட்டத்துறை மற்றும் அதற்கு உதவி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புடைய விடயமாகும்.

கேள்வி: அவ்வாறெனின், நூறு நாட்களினுள் செய்து முடிப்போம் என்று பெரியதொரு ஆவணத்தைச் சமர்ப்பீத்தீர்களே. அவ்வாறு சமர்ப்பித்தது உண்மையாகவே செய்ய முடியுமான விடயங்கள் தானே?

பதில்: உண்மையாகவே, நூறு நாளினுள் செய்வோம் என்று வாக்களித்த விடயங்களுள் அதிகமானவற்றைச் செய்து முடித்திருக்கின்றோம். மேலும் இன்று சிலர் இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கிறார்களில்லை.

விசேடமாக எமது அரசாங்கம் நாட்டில் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தியுள்ளதாகக் கூறிக் கொண்டு எதிர்க்கட்சியினர் அவ்வாறு கூறும் எதிர்க்கட்சியினர் நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முயலும் போது அதற்கு எதிராகச் செயற்படுகின்றனர். இந்த இரட்டை வேடம் எதற்கு? என்றாலும் இவ்வாறான விடயங்களினால் நாம் சரிந்து விழப் போவதில்லை.

கேள்வி: அரசாங்கம் இந்த தோல்வியை உணர்ந்திருக்கின்றது போல?

பதில்: இல்லை. அவ்வாறு ஒன்றுமில்லை. எதிர்க்கட்சியினர் எதைச் செய்தாலும் எமது பயணத்தை அவர்களால் நிறுத்த முடியது.

கேள்வி: இந்த நிதி ஒழுங்கு விதி தோற் கடிக்கப்பட்டதனை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தினேஷ் குணரத்தன கூறியிருந்தார். இது பற்றி என்ன கூற விரும்புகிaர்கள்.?

பதில்: இதிலிருந்து அவருக்கு பாராளுமன்றம் விவகாரங்கள் தொடர் பில் உள்ள அறிவை தெரிந்து கொள்ள முடி கிறது. இது ஒரு வரவு செலவு திட்டமல்ல. அத்தோடு நிதிச் சட்டமூல முமல்ல. இது ஒரு ஒழுங்கு விதி மாத்திரமே. எனவே அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற எந்தத் தேவையும் எழப் போவதில்லை. கடந்த ஜனவரி 8ம் திகதி கிடைத்த மக்கள் ஆணையினை நடைமுறைப்படுத்த சிலர் இடம் தருவ தில்லை. எமக்கு கிடைத்த மக்கள் ஆணையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிலருக்கு பொறாமையாக உள்ளது.

சிலர் குரோதப்படுகின்றார்கள். எனவே, அதனைச் செய்ய இடமளிக்காது காலுக்கு விலங்கிடுகின்றார்கள். இன்று பாருங்கள். நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நல்லெண்ணத்துடன் 19வது திருத்தச் சட்டத்தை நாம் கொண்டு வந்த போது கனவு கண்டு அச்சத்தில் எழும்பியவர்களைப் போல சிலரின் நடவடிக்கை அமைந்திருந்தது. ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல்வாதிகளினால் மாத்திரமே இந்த 19வது திருத்தச் சட்டமூலத்தினை எதிர்க்க முடியும். ஜனநாயக அரசியல் கட்சியின் எவராலும் இதற்கு எதிராகச் செயற்பட முடியாது.

கேள்வி: 19வது திருத்தச் சட்டம் பற்றி நீங்கள் பேசியதால் இதனக் கேட்க விரும்புகிறேன். தற்போது இதற்கு எதிரானவர்கள் முன்வைக்கும் முக்கியவிடயம்தான் இந்தச் சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு அந்த அதிகாரங்களைப் பிரதமருக்கு வழங்கி நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் ஒருவரை நியமிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகிறது என்று. இது பற்றி என்ன கூற விரும்புகிaர்கள்?

பதில்: இது முற்றிலுமாக இந்த யாப்புத் திருத்தம் தொடர்பில் செய்யப்பட்ட தவறான அர்த்தமாக்கும். சாதாரணமாக பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் வெஸ்ட் மினிஸ்டர் ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் அமைச்சரவையின் தலைவரும் பிரதமரே. இவ்விடயம் 19வது திருத்தம் மூலம் செய்யப்பட்ட ஒரு விடயமல்ல. ஜனாதிபதி அரசின் தலைவரோடு, கூட்டுப் படைகளின் தலைவராகவும் உள்ளார் என்பது இந்தத் திருத்தத்தின் மூலம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல. இங்கு பிரதமரை நியமிக்கும் அதிகாரமும் கூட ஜனாதிபதிக்கே உள்ளது.

ஜனாதிபதிக்குத் தனது விருப்பத்தின் பிரகாரம் செயற்படுவதற்கு யாப்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அரச நடவடிக்கைகளின் போது பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் விடயம் இதில் உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையுமே கேட்டார்கள். அதேபோல கடந்த ஜனவரி 8ம் திகதி இந்நாட்டு மக்கள் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிராகவே எழுந்தார்கள். அவ்வாறானதொரு நிலையில் ஜனநாயகத்தை பலப்படுத்த வேறொரு முறை இருக்கின்றதா?

கேள்வி: 19வது திருத்தம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எவ்வாறு பார்க்கின்றது?

பதில்: நல்லாட்சியினை மேன்மேலும் உறுதிப்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்லுகின்ற இந்த தீர்மானத்தை நாம் மிகவும் மதிக்கின்றோம். அது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

கேள்வி: நீங்கள் கட்சியின் பொதுச் செயலாளர். கட்சியின் கீழ் மட்ட செயற்பாடுகளில் நீங்கள் தொடர்புகளைப் பேண வேண்டும். எனினும் உங்களைத் தொலைபேசியில்கூட பிடித்துக்கொள்ள முடியாது என அநேகமானோர் கூறுகின்றனர். அந்த குற்றச்சாட்டுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

பதில்: அவ்வாறான குற்றச்சாட்டு இருப்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கடசியினுள் உள்ள ஏராளமான பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தேடிக் கொள்வதற்கான அர்ப்பணிப்பில் நான் ஈடுபட்டுள்ளேன். நான் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகினேயே தவிர, டெலிபோன் ஒபரேட்டர் ஒருவராக ஆகவில்லை. எனக்கு வரும் அனைத்து தொலைபேசி அழைப்புக்களுக்கும் என்னால் பதிலளிக்க முடியும்.

அதில் எந்தவித பிரச்சினையுமில்லை. எனினும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையிலும், பொறுப்புள்ள ஒரு அமைச்சர் என்ற வகையிலும் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய நிலை எனக்கிருக்கின்றது.

முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களிலும், கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்கக் கூடிய கூட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கும் போது வரும் அழைப்புக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? என்றாலும் அவ்வாறு கூறி இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது என்பதை நான் அறிவேன். எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக மிக விரைவிலேயே ஒரு வழிவகையினை நான் ஏற்பாடு செய்யவுள்ளேன். அதற்காக எனக்கு குறுகியதொரு அவகாசத்தைத் தாருங்கள்.

தமிழில்:
எம். எஸ். முஸப்பிர், 

No comments

Powered by Blogger.