Header Ads



ஈமானை பறிகொடுக்கும் அபாயத்தில், பல முஸ்லிம்கள் உள்ளனர் - ரிஸ்வி முப்தி எச்சரிக்கை

பல வருடங்களுக்குப் பின் இன்று மன்னார் வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் பல காலமாக என்னை இம்மாவட்டதின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான மௌலவி ஜுனைத் அவர்கள் அழைத்துக் கொண்டே இருந்தார்கள் அவர்களுடைய ஆவல் இன்று தான் நிறைவேறியது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவித்தார்கள்.

இன்று 05.04.2015 காலை மன்னார், புதுகுடியிருப்பு ஸலாமிய்யா அறபுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நாம் எல்லோரும் ஸஹாபாக்கள் வரலாறுகளையும், அவர்களின் ஹிஜ்ரத் தொடர்பான விடயங்களையும்; படித்தும், காதுகளினால் கேட்டுமிருக்கிறோம். ஆனால் மன்னார் மக்களாகிய நீங்கள் அதனை அனுபவ ரீதியாக கண்டிருக்கிறீர்கள்;. அத்துடன் நீங்களும் அந்த நபித் தோழர்களது வாழ்க்கை வரலாறுகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஹிஜ்ரத் நிகழ்வுகளை ஞாபகம் செய்வதானது உங்களுக்கு அது ஆறுதல் அளிக்கும்.

அத்துடன் நாம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்பொழுதும் உங்களை மறப்பது கிடையாது. நான் ஜெனீவா, தென்னாபிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்ட போது மன்னார் முஸ்லிம்கள் பற்றி பிரஸ்தாபித்து இருக்கிறேன். மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையடைய வேண்டும். இதற்காக அரசியல்வாதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

மேலும்; அல்-குர்ஆனையும், இஸ்லாமிய அறிவுகள், விழுமியங்களையும் சகலரும் படிக்க வேண்டும். இன்று சரியான இஸ்லாமிய கொள்கையின் அறிவுகள் இல்லாததினால் ஈமானை பறிகொடுக்கும் அபாயத்தில் பல முஸ்லிம்கள் உள்ளனர். காதியானிகள், ஷியாக்களின் செயற்பாடுகள் அதிகம் இருப்பதினால் சகல முஸ்லிம்களும் அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் மிகக் கவனமான இருக்க வேண்டும்.

அது போலவே அறபு மத்ரஸாக்களில் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலேயே பிக்ஹ் கற்கைநெறிகள்; அமைய வேண்டுமெனவும், அதனை மேலும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் சென்ற மாதம் இத்திஹாத் எனும் அறபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தாம் முன்வைத்ததாகவும் தெரிவித்த அவர், எமது ஜம்இய்யாவினூடாக சகல மக்களையும் சகல விடயங்களிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயற்பட தாம் அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார். 

குறித்த விழாவில்; ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ரிழா, நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களான அஷ்-ஷைக் அப்துல் ஹமீது பஹ்ஜி, அஷ்-ஷைக் எச்.உமர்தீன் றஹ்மானி, அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம்.ஜஃபர் றஹ்மானி ஆகியோரும், அறபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள் மற்றும் ஆலிம்கள், ஊர் மக்களென  பலரும் கலந்து சிறப்பித்தனர்.

15 comments:

  1. Rasool sal Averhalin fikh muraipadi sollikodukkamaddengalo

    ReplyDelete
  2. Why only Shafi Madh'hab? There are other Madh'habs too?? Are they not acceptable? If someone follows Hambali Madh'hab, is he considered a Non- Muslim? Teach all the Madhaahibs. Which Madh'hab is our Rasool?? Laymen misunderstand & fight each other for this very reason!!

    ReplyDelete
  3. Jaffna boy I agree with you

    ReplyDelete
  4. ACJU should turn to neutral. Rizvi is not suitable for the president of ACJU. There are so many reasons for my argument,
    1. kinniya crescent problem (not a problem, it is a confirmed message) he remembered the help done by ACJU after Tsunami 26th December 2014
    2. Halal issue (without proper approval ACJU continued to issued Halal certificate)
    3. Nikab issue (There are no evident to wear Nikab in Islam)

    ReplyDelete
  5. ஜப்னா முஸ்லிம், நீங்கள் எனது கோமண்டை பிரசுரிக்கவில்லை, அனால் நான் சொன்னதை அப்படியே மற்றவர்கள் சொல்லி விட்டார்கள், இதன் பிறகாவது, நீங்கள் ஒரு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு, அதற்கு மாற்றமான கோமான்ட்களை தடை செய்யும் கருத்துச் சுதந்திர தடையை நிறுத்துங்கள்.

    ReplyDelete
  6. Thalaimai thuvaththukku thahithi illaatha thalaivar
    Koduththathai sollikaattura madaththanamaa pesura.
    Hmmm innum

    ReplyDelete
  7. Mr Abdul jawad come and take the ACJU comite allah ndu vaya pothikondu erikirathu

    ReplyDelete
  8. Jaffna muslim neega ondru command poduratha stop pannuga or comments poduravangalda comments a stop pannuga ethu oru pirachanaya moottakoodiya visayam pinnala alivukku karanamagirum

    ReplyDelete
  9. I accept your openion mr,Rahuman Rahim,because the comment is creating somany problems among uor socity.

    ReplyDelete
  10. அல்லாhவின் துhதருக்கு மார்க்கம் தெரியாதோ அவர்கள் சொல்hமல் விட்டுவிட்ட சட்டங்களை ஸாபி மத்கப் அறிஞ்ஞர்கள் கூறிவிட்டால்களோ? என்ன மௌலவி கூறுகிறீர்கள் அப்ப அல்லாhவின் துhதர் என்ன மத்கப் அவர்களைத் தவிர மற்ற யாரைப் பின்பற்றினாலும் உங்களுக்கு சரிபோல் உள்ளது நீங்கள் தான் முதலில் அல்லாhவிற்குப் பயந்து கொள்ள வேண்டும் இந்த மார்க்கத்தில் உலமா சபைத் தலைவர் என்ற பதவி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இது அல்லாhவிற்கு மாத்திரம் பயப்பட்டு செயற்பட வேண்டிய பதவி இதை வைத்து மத்கப் வழக்க வேண்டாம்

    ReplyDelete
  11. @Rahuman Rahim என்று நேரடியாக அல்லாஹ்வின் பெயரை வைத்துக் கொண்டு இருப்பவரே, முஸ்லிம்களின் பெயர் அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் என்கின்ற அமைப்பில், அல்லாஹ்வை கண்ணியப்படுத்தி, அல்லாஹ்வின் அடிமை என்பதை வெளிக்காட்டியே அமையும், நீங்களோ, நீங்கள்தான் அல்லாஹ் என்பதுபோன்று, பிஸ்மியில் வரும் அல்லாஹ்வின் பண்புகள் இரண்டை நேரடிப் பெயராக போட்டுக்கொண்டு, கருத்து சுதந்திரத்தை முழுமையாக முடக்க நினைபப்து, வடிகட்டிய பிற்போக்குத் தனமாகும்.

    இங்கே உங்களுக்கு உங்கள் கருத்தை சொல்ல எப்படி சுதந்திரம் இருக்கின்றதோ, அதோ போன்று, மோசமான வார்த்தைகள் பாவிக்காமல், தங்களது கருத்துக்களை முன்வைக்க மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது.

    ஒரு செய்தியின் போக்கிற்கு வலுச் சேர்ப்பதே பின்னூட்டங்கள்தான். பின்னூடங்களை அனுமதிக்காத பல இணையங்கள், வாசகர் ஆதரவை இழந்து வருவது கண்கூடு.

    சுதந்திரமான கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் பதிலளிக்க முடியாத வங்கரோத்து நிலையில் இருப்பவர்கள்தான், மற்றவர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.

    நம்மையெல்லாம் மட்டுமல்ல, பெரும் பெரும் சிந்தனையாளர்கள், விமர்சகர்களைஎல்லாம் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் இறக்கி வைக்கபப்ட்ட இஸ்லாம் மார்க்கம், மனிதர்களது கருத்துக்களாலும், சிந்தனைகளாலும், விமர்சனங்களாலும் மாசுபடும் அளவிற்கு பலவீனமானதும் அல்ல, விமர்சிப்பவனை வெட்டிக் கொல்லச் சொல்லும் அளவிற்கு காட்டுமிராண்டித் தனமானதும் அல்ல.

    இஸ்லாத்தை பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் அல்லாஹ்வின் மீது அவ நம்பிக்கை வைக்கின்றீர்கள், அதாவது, மனித கருத்துக்களுக்கே முகம் கொடுக்க முடியாத பலவீனமான மார்க்கத்தை அல்லாஹ் இறக்கி விட்டான் என்று நீங்கள் அல்லாஹ்வை கேவலப் படுத்துகின்றீர்கள்.


    கருத்துக்களை, கருத்துக்களால் சந்திக்கும் திராணி வேண்டும், அதுதான் சிந்திக்கத் தெரிந்த மனிதனின் விசேட தன்மை, மனிதனையும், மிருகங்களையும் வேறுபடுத்தும் சிறப்பான இயல்பு.

    ReplyDelete
  12. Mr. Rhuman
    Tell your ACJU leader to answer my question. With his Rizvi's leadership given the shariah approval to Ceylinco Profit Sharing and advertised among Muslims. Now see what happened to company and who did the investment. There are so many educated people in the ACJU, not only RIZVI. I think you are a Thableek Extremist.

    ReplyDelete
  13. கலிமா ஷஹாததைன் (அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்) கூறிவிட்டால் அவன் ஒரு முஸ்லிம்; இதுதான் அளவுகோல். இதற்கு மேல் உள்ள கருத்து வேறுபாடுகளை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் விட்டுவிடுவோம். இதுதான் அல்லாஹ் எமக்குக் காட்டித்தரும் வழிமுறையாகும்.

    ReplyDelete
  14. தாஹா முஸம்மில். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஷீஆக்கள், காதியானிகள், முஃதஸிலாக்கள் போன்ற எல்லோரும் முஸ்லிம்களா?

    ReplyDelete
  15. Little Star! Jaffna Muslims didn't publish my comment too! Hope this time they do.

    First of all I want ACJU - to announce day of Ramadan and Eid according to the sighting of moon not according to the published ( eid) holiday in the calendar.
    Not only ACJU all the leaders of the Jamaath should announce the right date according to the sighting of the moon. Last time everyone knew when was the eid but they didn't wanna celebrate other jamaath thought if they celebrate on that day they would have been branded as Thawheed Jamaath. Those who did like that I have a question for them.
    Do you live/celebrate how others want u to live /celebrate eid or for the sake of Allah ?

    Most jamaaths in Sri lanka mostly concentrating on how to increase the number of people in their jamaath thaan preaching Islam.

    ReplyDelete

Powered by Blogger.