Header Ads



“அப்பி பைஹினவா”

தமது தலைமையிலான அரசாங்கத்தை பற்றி இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அப்பி பைஹினவா” “Abi Bahinawa” என்ற இரண்டு வார்த்தேயே அதுவாகும்.

“நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

இது புதிய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகவே கருதப்படுவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்ட பின்னரே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட அவென்ட்காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பில் கூட சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அப்படியானால் எவ்வாறு அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்ல முடியும் என்று அனுரகுமார கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால, அனுரகுமாரவின் கருத்தை ஏற்றுக்கொள்வதை போன்று நாம் கீழிறங்குகிறோம். எனினும் இதற்கான உரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் செயற்பட்டு வந்தது.

எனினும் சிறந்த நிர்வாகம் (Good Governance) என்ற தமது அரசாங்கத்தின் கீழ் அவ்வாறு செயற்பட முடியாது. எனவேதான் விமர்சனங்கள் எழுகின்றன என்று மைத்திரிபால குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த அனுரகுமார, ஏப்ரல் 21ம் திகதி வரை ஜே.வி.பி அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கும். இந்தக்காலக்கட்டத்தில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜே.வி.பி தேசிய நிறைவேற்றுசபையில் இருந்து விலகிக்கொள்ளும் என்று எச்சரித்தார்.

1 comment:

Powered by Blogger.