டோஹா கத்தாரில் "அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா " (ASJO)
"அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா " (ASJO )எனும் அமைப்பொன்றை 17.04.2015 அன்று அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் உருவக்கபெற்றுள்ளனர்.
அட்டளைச்சேனை கத்தார் வாழ் சகோதரர்கள் தங்கள் கூட்டு முயற்சியின் மூலம் மாதம் ஒருமுறை தங்களால் இயன்றளவு ஒரு தொகை பணத்தைச் சேகரித்து அதனை நிலையான தர்மமாக அட்டளைச்சேனையில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் வறிய மக்களின் தேவைகள் , கல்விக்கூடங்கள் குரான் மத்ரசாக்கலின் சிரிய பெரிய தேவைகள் போன்றவற்றுக்காக நிலையான தர்மமாக அப்பணத்தை பயன்படுதுவதட்காக
அட்டளைச்சேனையைச் சேர்ந்த கத்தார் வாழ் சகோதர்களினால் "அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா " (ASJO )எனும் அமைப்பொன்றை
17.04.2015 அன்று உருவக்கபெற்றுள்ளனர். அல் ஹம்துலில்லாஹ் !.
எனவே இதன் நோக்கமானது நம் எல்லோருடைய பங்களிப்பின் மூலம் "நிலையான தர்மத்தை"(ஷதக்கா ஜாரியா) உருவாக்கி எமது மரணத்தின் பின்பும் அதன் பயனை அடைந்து கொள்வதாகும், இதனை தனியாகவும் செய்து கொள்ளலாம் முடியாதவர்கள் கூட்டாக இணைந்தும் செய்து கொள்ளலாம்.
திருமறையில் அல்லாஹ் கூறுகிறான் "உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். மற்றும் ஹதீஸ் அடிப்படையில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. (முஸ்லிம்:3358)
ஆகவே கத்தாரில் எமது "அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா " (ASJO ) அமைப்பினருடன் கத்தார் வாழ் சகோதரர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தங்களையும் இணைத்து நிலையான தர்மத்தை கூட்டாக செய்து மறுமையின் வெற்றியை அடைந்து கொள்ளுமாறு "அட்டளைச்சேனை ஷதக்கா ஜாரியா " (ASJO) அமைப்பினர் சார்பாகவும் அட்டளைச்சேனை மக்கள் சார்பாகவும் பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.இம்முயற்சிக்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிபர்கின்றோம்.
கத்தாரில் இருந்து சாகீர் ஹம்மாத் +97470342216
good investment.
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDelete