மோசடிகளில் ஈடுபடும் 97 வீதமானவர்கள் சட்டத்தரணிகளே - பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
மோசடிகளில் ஈடுபடும் 97 வீதமானவர்கள் சட்டத்தரணிகள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்த போதிலும் , பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பிரித்தானிய கணனி ஹெக்கர் ஒருவரைப் பயன்படுத்தி கணனிகளை ஹெக் செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் இது பெரும் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தரப்பில் அமர்ந்திருந்தாலும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தாம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment