அமெரிக்காவில் 6 குழந்தைகளை, கொன்றவளுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டது
அமெரிக்காவில் தனது புதிதாக பிறந்த ஆறு குழந்தைகளை கொலைசெய்த பெண் ஒருவருக்கு ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயதான மேகன் ஹன்ட்ஸ்மன் என்ற பெண் முன்னர் வசித்த வீட்டின் வாகன தரி ப்பு அறைக்குள் காட்போட் பெட்டிகளில் அடை க்கப்பட்ட நிலையில் புதிதாக பிறந்த குழந் தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்;டதை அடுத்து கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட் டார்.
தனது ஆறு குழந்தைகளை கொலை செய்தததை கடந்த பெப்ரவரியில் அந்த பெண் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் பிரோவோ நகர நீதிமன்ற த்தில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோதும் குறித்த பெண்ணுக்கு 30 அண்டிலிருந்து ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
1996 முதல் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கும் இந்த குழந்தைகள் பிரசவித்த விரைவிலேயே மூச்சுத்திணரவைக்கப்பட்டோ அல்லது கழு த்தை நெரித்தோ கொல்லப்பட்டிருப்பதாக பொலி ஸார் குறிப்பிட்டுள்ளனர். போதைக்கு அடி மையாகி இருக்கும் ஹன்ட்ஸ்மன் மேலும் குழ ந்தைகளை வளர்ப்பதற்கு தேவையின்றி இரு ந்திருக்கிறார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள் ளனர்.
எனினும் இவருக்கு ஏற்கனவே மூன்று குழ ந்தைகள் உள்ளன.
Post a Comment