கடலில் படகு கவிழ்ந்ததால் மழை நீர், மீனை சாப்பிட்டு 66 நாட்களுக்கு உயிர் வாழ்ந்தவர்
அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்ததால் மழை நீர் மற்றும் பச்சை மீன்களை தின்று 66 நாட்கள் உயிர் வாழ்ந்த அதிசய மனிதன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். லூயிஸ் ஜோர்டான் என்பவர் 37 அடி நீளமுள்ள படகில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்துள்ளார். திறந்த வெளி கடலில் சுதந்திரமாக பயணம் செய்யவும், அத்துடன் மீன்பிடிக்கவும் ஜோர்டான் விரும்பியுள்ளார். அப்போது அவரது படகு திடீரென கடலில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. ஆனால், சுதாரித்துக்கொண்ட ஜோர்டான் கவிழ்ந்த படகின் மீது ஏறிக்கொண்டார். அத்துடன் அந்த பக்கம் ஏதாவது படகு அல்லது கப்பல் வருகிறதா? என்று நீண்ட நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் எந்த கப்பலும் அந்த வழியாக வரவில்லை.
ஜோர்டான் மீன்பிடிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருந்ததால் மீன்களை பிடித்து கவிழ்ந்த படகு மீது போட்டார். ஓரிரு நாட்கள் கடந்தபின்னரும், அந்த பக்கம் எந்த கப்பலும் வரவில்லை. சரி முடிந்த வரை வாழ்வோம் என்று தீர்மானித்த ஜோர்டான், தான் பிடித்து வைத்திருந்த மீன்களை பச்சையாகவே சாப்பிட ஆரம்பித்தார். மழை பெய்ததால் தண்ணீரைப் பிடித்து குடித்து வந்துள்ளார்.
இப்படி 66 நாட்கள் தனது வாழ்நாளை கஷ்டப்பட்டு கழித்துள்ளார். 66-வது நாள் ஜெர்மன் நாட்டு கொடியுடன் ஒரு பெரிய எண்ணெய் கப்பல் அந்த வழியாக வந்துள்ளது. இதைப்பார்த்த ஜோர்டான் தனது கைகளில் வைத்திருந்த பொருட்கள் மூலம் சைகை காண்பித்தார். இதை எப்படியோ அந்த கப்பலில் உள்ள ஒருவர் பார்த்து விட்டார். உடனே அவர்கள் அமெரிக்க கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வடக்கு கரோலினாவில் இருந்த 200 மைல் தொலைவில் கவிழ்ந்த படகில் சிக்கித் தவித்த ஜோர்டானை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஒரு முஸ்லிமாக இருந்தால், அல்லாஹ்வின் அருளால் காப்பாற்றப் படார் என்று போட்டு, மாஷா அல்லாஹ் சொல்லலாம். இவர் முஸ்லிமா என்று தெளிவாக தெரியாவில்லை.
ReplyDeleteEven now you can say masha allah.
DeleteAlla என்றால் தமிழில் அதன் அர்த்தம் கடவுள்,இறைவன் ஆங்கிலத்தில் GOD அரபியில் அல்லா அவ்வளவு தான்
ReplyDeleteLittle star Neenga oru fool star thaan because ella matha periyaarkalum kadavul onruthaan enkiraarkal ex Sri Sri Ravi sangar.
ReplyDeleteSo kadavul onru enum pothu Muslim enraal Allah kaappaatrinaan enru solringale yaaraaha irunthaalum Allah thaan kaappaattruvaan enpathu oru Muslim aaha irukkum ungalukku vilanguthillaiae
Uvan sangar raja vidam poi islam maarkkaththa padinga. Avar Quran pattri enna sollukiraar endru kelunga appavaavathu purium
Good
ReplyDeleteஅட பாவமே இந்த சின்ன ஸ்ரார்.ஸ்ரார் ஆவதென்றால் எவ்வளவு அறிவு வேண்டும் என்று.
ReplyDelete