Header Ads



400 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் புகாட்டி கார்கள் - துபாய் போலீசார் அசத்தல்

மணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ’புகாட்டி வெய்ரான்’ ரக கார்களை துபாய் போலீசார் தங்களது போலீஸ் ரோந்துக் கார்களின் அணிவரிசையில் புதிதாக இணைத்துள்ளனர். 

மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லோம்பார்கினி அவென்ட்டடார், காரின் விலை 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி). இந்த கார்களில்தான் துபாய் போலீசார் காவல் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

லம்பார்கினி கார்களை அடுத்து 'ஃபெராரி' கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான 'ஆஸ்டன் மார்ட்டின்', 'பெண்ட்லி', 'மெர்செடெஸ்' ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி ரோந்து பணியில் இணைத்தனர். ’போர்ஸ்சே பனமெரா எஸ்.இ.-ஹைப்ரிட் கார்களும் இந்த அலங்கார அணிவகுப்பு வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த அதிநவீன சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 5.2 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப் பிடிக்கும். 

இந்த வேகத்தில் போனால் சாலைகளை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை விரட்டிச் சென்று பிடிக்க முடியாது என கருதிய துபாய் போலீசார், மணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ’புகாட்டி வெய்ரான்’ ரக கார்களை தற்போது தங்களது போலீஸ் ரோந்துக் கார்களின் அணிவரிசையில் புதிதாக இணைத்துள்ளனர். 

16 சிலிண்டர்களால் இயக்கப்படும் இந்த அதிநவீன காரின் எஞ்சின் 1200 குதிரை சக்தி ஆற்றலை வெளிப்படுத்த வல்லது. வெறும் இரண்டரை வினாடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மேலே உள்ள கார்களின் பெயர்கள் எல்லாம் வாயில் நுழையுது இல்லை, ஒரு வேளை பணம் இருந்தால் நுழையுமோ தெரியவில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம், பஜாஜ், டாடா, அசோக் லேலண்ட், லுமாலா, ஹீரோ, இதுகள் தான்.

    மகிந்தவின் ஆட்சி தொடர்ந்து இருந்து இருக்குமானால், இந்தக் கார்களை எல்லாம் கோல்பேஸ் ரேஸில் பார்க்கக் கூடியதாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.