Header Ads



அமைச்சர் றிசாத் பதியுத்தினுக்கு எதிராக 4 சதிகாரர்கள்

(அஸ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத்பதியுத்தீன்  எதிராக லஞ்ச ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு முறைப்பாடு தொடர்பாகவும் அவசரமாக விசாரித்து குறித்த ஆணைக்குழு உண்மையை உடனடி வெளிக்கெனர வேண்டும். என  அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தலைமையிலான அக்கட்சியின் அதியுயர்பீடம் தீர்மாணத்திருப்பதாக அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று ஜனாதிபதி தலைமையில் பிரதமரிண் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுக் குழுவில் பிரஸ்தாபித்துள்ளதோடு இது தொடர்பாக அவசரமாக விசாரணைகளை நடாத்தி உண்மைகளை நாட்டுக்கு தெளிவுபடுத்த  வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் றிசாத்  வழியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பலதரப்பட்ட ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு முடிக்கிவிட்டுள்ளது.  இதன் நடவடிக்கைகளில்  குறித்த ஆணைக்குழு பிரதான பங்கினை வகிக்கின்றது. அதே நேரம் சிலருக்கு எதிராக சேறு பூசுகின்ற நடவடிக்கைகளிலும் ஒரு சாரார் ஈடுபட்டுள்ளனர்.

அ.இ.ம.காங்கிரஸ் அண்மைக் காலமாக வடகிழக்கிலும் வட கிழக்குக்கு வெளியிலும்  மக்களின் அமோக வெற்றியைப் பெற்று வறுகின்றது.

இது பலருக்கு வயிற்று எரிச்சலை உருவாக்கியுள்ளது. மக்களிடம் தமது செல்வாக்கு இழக்கப்பட்டு செல்வதும், அ.இ.ம. காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதும் தமது எதிர்கால அரசியல் தொடர்பாக பலருக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.  

இதன் ஓர் அங்கம் தான் 'ஆறு கடக்கும் வரை, அண்னன் தம்பி ஆற்றைக் கடந்ததும் நீ யாரோ? நான் யரரோ?' என்பது போல அண்மையில் முதலமைச்சர் பதவியை பெறுகின்ற வரை ஜ.ம.சு.கூட்டமைப்பின்  தயவை நாடி நின்றது.  முதலமைச்சர் பதவி  கிடைத்ததும் ஜ.ம.சு. கூட்டமைக்குள்  இருக்கின்ற முஸ்லீம் கட்சிகளை வெளியில் போட்டதுமாகும்.

இந்தப் பிண்னனியினால் அ.இ.ம. காங்கிரசுக்கு எதிராகவும் அதன் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் பாறியதொரு சதிவலைப் பின்னால்  பினைக்கப்பட்டு  கொண்டிருக்கின்றது.  இதில் பங்குதாரர்களாக ஜாதி, மத வேறுபாடுகளுக்கப்பால்  பலர் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  அல்லது ஒவ்வொரு பாத்திரத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.  

அதன் ஓர் அங்கமாகத்தான்  வெறும் தொலைக்காட்சி மாயையைக் காட்டி  மலையகத்திலிருந்து  பாராளுமன்றம்  சென்ற ஒருவர் தொலைக்காட்சிக்கு தொடர்ந்தும் மக்கள் ஏமாறமாட்டார்கள். என்பதை  உணர்ந்தும் வடபுலத்து வன்னியில் கால் பதிக்க எத்தணித்து கொண்டு  சென்ற அவர் பஸ் வண்டியையும் தவறவிட்டு தான் எதிரியாக றிசாத் பதியுத்தீணை தத்தெடுத்து தகடு சித்தம் போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நபரும் ஏற ஏற்றிவைத்த ஏணியை எட்டி உதைப்பவர்களும இணைந்து நாடத்துகின்றதொரு  நாடகமும் ஆகும். 

அந்த நாடகத்தில் ஒரு முஸ்லீம் கட்சியில் வண்னியில் போட்டியிட்டு படுதோல்வி  அடைந்தவருக்கு லஞ்ச ஆணைக்குழுவில் ;முறைப்பாட்டாளர். என்ற பாத்திரம் 'அடி உதபுவது போல அண்னன் தம்பி உதவமாட்டார்கள். '   என்ற முதுமொழி பொய்த்துப்போய் இருக்கின்ற கால கட்டத்தில் முக்கூட்டுச் சதியின் முதலாவது லஞ்ச ஆணைக்குழுவில் றிசாத் பதியுத்தீனுக்கு முதலாவது முறைப்பாடு.

இரண்டாவது முறைப்பாடு  அ.இ.ம.காங்கிரசின் தலைவர் றிசாத்பதியுத்தீனையும் ஒழித்துக் காட்ட புறப்பட்ட வீரவேங்கைகளே உங்களுக்கு உதபிக் கரம்மீட்ட நாங்கள் என்று புறப்பட்டிருக்கின்ற பேரிணவாதம் 'வில்பத்து காட்டை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கொள்ளையடித்து விட்டார்.  என்று லஞ்ச ஆணைக்குழுவில் அடுத்த முறைப்பாடு. 

25 வருடஙக்களாக சொந்த மண்னை இழந்து வாழ்ந்த வட புலத்து முஸ்லீமகள் மீளக் குடியேற காணி நிலம் இல்லாது போது தாம் வாழ்ந்து விடுதலைப்புலிகளது  ஆதரவாளர்களைப் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் மீளளளிக்கப்படாத நிலையில் காலத்துக்கு காலம் வட புலத்திற்கு  வாக்குச் சேகரிக்க வரும் முஸ்லீம்  அரசியல் வாதிகளும் ஏர் எடுத்தும் பார்க்காத நிலையில் தண்னந்தனியாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன்  அரசாங்கத்திற்குள் போராடி பல அரச அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பலதடவைகள் அவாகள் வடக்கு விஜயம் மேற்கொண்டு அரச காணிகளை அடையாளம் கண்டனர். அவைகள்   சட்டபூர்வமாக  அவ் அதிகாரிகள் காணிகளுக்கும் வில்பத்து காட்டுக்கும் தொடர்பில்லை. என்று அறிவித்தன் பின்பும் இவ்வாறான முறைப்பாடு என்றால்  இதன் பின்புலம் இல்லாமலா? எனவே இவ் இரண்டு முறைப்பாடுகளின் பின்புலம்  வௌ;வேறாக இருந்தாலும் அவைகள் அடைய எத்தணிக்கும் இலக்குகள் ஒன்றுதான். அதே நேரம் மீள்குடியேறிய மக்களில் பெரும்பாலானோர்  வீடுகள் ஏனைய அடிப்படை வசதிகளின்றி  வாடும் அவல நிலை. ஒரு புறம் இந்திய உதவி வீட்டுத்திட்டத்தில் காட்டப்படுகின்ற ஓர வஞ்சனை மறுபுரம். போதாக்குறைக்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீன்தான் இந்திய உயர் ஸ்தாணிகர் என்பது போல இந்திய உதவி வீடுகளையெல்லாம் முஸ்லீம்களுக்கே அமைச்சர் றிசாத்பதியுத்தீன் அள்ளிக் கொடுக்கின்றார். என்று விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கலாள் செய்யபடுகின்ற கலாட்டர்கள் இன்னொறு புரம்.

நெருக்கு வாரங்களை பற்றி வரலாறு தோறும் நாம் படித்திருக்கின்றோம். ஆனால் அமைச்சா றிசாத் பதியுத்தீனுக்கு எதிராக வருகின்ற சகல திசை நெருக்கு வாரம் போன்ற ஒன்றை நாம் கேள்விப்படவில்லை. 

இந்த நாட்டில் சிறுபான்மைகள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். சில சர்ந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையினர் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள்,  இன்னும் ஒரு சர்ந்தர்ப்பத்திலும் சிறுபாண்மை பெரும்பாண்மை என்ற வேறுபாடில்லாமலும் சாதி, சமயம் என்ற வேறுபாடில்லாமல் தமிழ் சிங்களம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரு குழு ஒற்றுமைப்பட்டிருப்பது அமைச்சர் றிசாத் பதியுத்தீன்  விடயத்தில் மட்டும் தான் என்றால் மிகையாகாது.

ஆனால் நோக்கங்கள் வௌ;வேறு இத்தனைக்கும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன்  செய்த குற்றம் வட புலத்தின் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு மறுவாழ்வு அளிக்க முனைவதும் அவர்களது மகோன்னத  ஆதரவைப் பெற்றிருப்பது தான்.  ஒரு தரப்பு ஏற்றிய ஏணி என்றும் பாராமல் எட்டி உதைத்துவிட்டோம் விட்டுவைத்தால் அடுத்தவன் வந்து ஏறிவிடுவான் எனவே  ஏணிக்கே  வேட்டு வைக்க வேண்டும் என்ற எத்தணம்.

அடுத்த தரப்பு வட புலத்தில் சீசன்களுக்கு வாக்குவேட்டைக்கு செல்பவர்கள்.  றிசாத் பதியுத்தீன் என்ற எதிர்கடையை இல்லாமல் செய்துவிட்டால் இலவசமாக வாக்குகளை பாட்டம் பாட்டமாக அல்லலாம் என்ற நட்பாசை.  
இன்னொறு தரப்பினர்க்கு தெலைக்காட்சியை நம்பி நுவரேலியாவுக்குச் சென்றதால் நுவரெலியாவும் ஒரு முறைக்கு  மேல் ஏமாற மாட்டாது. போல்  இருக்கின்றது.  வண்னிக்குச் செல்வோம் என்றால் வழியில் றிசாத் பதியுத்தீன் நிற்கின்றானே என்கின்ற ஆத்திரம்.

கடைசித் தரப்பு முஸ்லீம்களின் இன்று பலமாக வளர்ந்து வருகின்ற ஒரு குரலை  நசுக்கி விட்டால்  முஸ்லீம்களை  தமது கொடுக்கான்கலால் குத்திவிடலாம் என்ற அங்கலாய்ப்பு.

குழந்தைக்கோ வயிற்றுப்பசி, காமுகனுக்கோ காமப்பசி, மங்கைக்கோ மானப்பசி, காலனுக்கோ மரணப்பசி,  என்கின்ற 4 பசிகளையும் வைத்து பினையப்பட்டதுதான் இந்தப் 'பசி' ஒரு காலத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தப் 'பசி' திரைப்படமாகும்.

அதே போன்று தான் இங்கு 4 நட்பினர்கள் 4 வகையான சதிகளைக் கொண்டு 'சதி' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே இது தொடர்பான உண்மைகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளிக்கெணாரப்படல் வேண்டும்.  என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீடம் தமது தீர்மாணத்திருக்கின்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹமீட் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

2 comments:

  1. மடியிலே கணம் இல்லையென்றால், வழியிலே பயமில்லை. இவ்வளவு அழுது வடிந்து இருக்கத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.