அரசாங்கத்திற்கு 4 வாரத்தில் 41 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது - பந்துல குணவர்தன
சர்ச்சைக்குரிய திறைசேரி முறிகள் விநியோகத்தினால் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி மீதான இரண்டாவது தாக்குதல் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திறைசேரி முறிகள் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்தன, பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் 4 வாரங்கள் கடந்துள்ள நிலையில், 41 பில்லியன் வட்டியை நட்டமாகத் தாங்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
அத்துடன், காலி – மாத்தறை அதிவேக வீதியை முழு அளவில் பூர்த்தி செய்வதற்கு 25 பில்லியனே செலவானது எனவும் மேல் கொத்மலை நீர்மின் நிலையத்திற்கு 23 பில்லியனே செலவானது எனவும் ஹெஜிங் ஒப்பந்தத்தில் 12 பில்லியனே நட்டமாக உத்தேசிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்ட அவர், 4 வாரத்தில் இங்கு 41 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினார்.
Post a Comment