Header Ads



பெண்களுக்கும் அனுமதி - 35 ஆண்டுகால தடையை தளர்த்திய ஈரான்

எண்ணெய் வளம் மிக்க அரேபிய நாடுகளில் ஒன்றான ஈரானில் நடைபெறும் ஆடவர்கள் விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும், சில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் அந்நாட்டு பெண்களுக்கு கடந்த 1979-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை மீறிய வகையில் கடந்த ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற ஆடவர் கைப்பந்து போட்டியை காண்பதற்காக மைதானத்துக்கு வந்த கோன்ச்சே கவாமி என்ற 26 வயது இங்கிலாந்து பெண்ணை கைது செய்த ஈரான் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

சுமார் 5 மாத சிறைவாசத்துக்கு பின்னர் 20 ஆயிரம் பவுண்டுகளை செலுத்தி கடந்த நவம்பர் மாதம் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த தடையை நீக்கி பெண்களும் விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட அனுமதியளிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ‘பிபா’ தலைவர் சமீபத்தில் ஈரான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆடவர்கள் பங்கேற்கும் குறிப்பிட்ட சில விளையாட்டுப் போட்டிகளை மட்டும் பார்வையிட பெண்களையும், குடும்பங்களையும் அனுமதிப்பது என ஈரான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் விளையாட்டு துறை துணை மந்திரி அப்டோல்ஹமிட் அஹ்மடி அறிவித்துள்ளார். 

அதே வேளையில், இந்த அனுமதியானது எல்லா போட்டிகளுக்கும், எல்லா மைதானங்களுக்கும் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின் மூலம் முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக நீங்கிவிட்டது என புரிந்துக்கொள்ள கூடாது. அந்த தடை ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. ஈரான் பாரசீக நாடு. பாரசீகமும், அரேபியாவும் வெவ்வேறான கலாச்சாரம், வரலாறு, நாகரீகம் என்பவற்ற கொண்டவை. பாரசீக வரலாறும், நாகரீகமும் அரேபிய நாகரீகத்தையும், வரலாற்றையும் விட தொன்மையானவை, புகழ் பெற்று உச்சத்தில் விளங்கியவை.

    ஈரான் படிப்படியாக மனித நாகரீகத்தை நோக்கி அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே.

    ReplyDelete

Powered by Blogger.