Header Ads



இந்தோனேசியாவில் கொத்தடிமைகளாக, இருந்த 320 பேர் விடுதலை

இந்தோனேசியா நாட்டில் பல ஆண்டுகளாக கொத்தடிமை முறையில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்த சுமார் 320 மீனவர்களை அந்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சகம் மீட்டு, விடுதலை செய்துள்ளது.

இங்குள்ள அரு தீவின் அருகே உள்ள மீனவ குப்பங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் கட்டுரை வெளியிட்டது. இதனையடுத்து, இவர்களை படகுகளின் உரிமையாளர்கள் அடித்தும், உதைத்தும், மின்சார அதிர்ச்சி செலுத்தி சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்திய செய்திகள் உலகின் கவனத்தை ஈர்த்தது.

மனித உரிமைகளுக்கு முற்றிலும் முரணான இந்த கொடூரத்தை தடுத்து நிறுத்தி, அடிமைப்படுத்தப்பட்டு்ள்ள மக்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். இதனையடுத்து, இந்தோனேசிய அரசின் கடல்வளம் மற்றும் மீன்பிடி தொழில் கண்காணிப்பு அமைச்சக அதிகாரிகள் இவர்களை மீட்கும் நடவடிக்கையில் களமிறங்கினர்.

கொத்தடிமை மீனவர்களை ரகசியமாக சந்தித்த அதிகாரிகள், அவர்களை மீட்டு வர படகுகளை அனுப்பினர், இது பற்றிய தகவல் அறிந்ததும் சுமார் 320 பேர் தங்களது முதலாளிகளிடம் இருந்து தப்பியோடிவந்து தயாராக இருந்த படகுகளில் ஏறிக் கொண்டனர். இவர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் மியான்மர் நாட்டில் இருந்து கொத்தடிமை முறையில் அழைத்து வரப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இதேபோல், மேலும் பலரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.