Header Ads



19 தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்படும்..?

ஏற்கனவே திட்டமிட்டபடி 19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதேவேளை 19வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று தீர்மானித்து ள்ளனர்.விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்த ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக,

19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும், இதனை எதிர்ப்பவர்கள் தொடர்பில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். விவாதத்தின் இறுதியில் 19வது திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தவிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 19வது அரசியல மைப்புத்திருத்தச் சட்டமூலம் தொடர்பான முழுமையான யோசனை இன்று (21) சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுஇவ்விதமிருக்க, தேர்தல்மறுசீரமைப்பு தொடர்பான 20வது திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பிக்காமல் 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

தேர்தல் மறுசீரமைப்பை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளபோதும் அதுபோதுமானதாக இல்லையென நிமல்சிறிபால.டி.சில்வா இங்கு தெரிவித்துள்ளார். ஆனால் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது 19வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐ.ம.சு.மு கட்சித் தலைவர்கள் இணங்கியிருந்தார்கள்.

ஆனால் அரசாங்கம் கொண்டுவரும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் ஆதரவுவழங்காதிருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான எதிர்த்தரப்பு எம்.பிக்கள் முடிவுசெய்துள்ளதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். சுயாதீன ஆணைக் குழு ஜனநாயக மறுசீரமைப்பு என்பவற் றின் பலன்கள் மக்களுக்குச் சென்றடை வதை தடுக்கும் முயற்சியில் ஐ.ம.சு.மு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட் டார்.

இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு எம்.பிக்களின் கூட்டமும் நடைபெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சுஜீவ சேனசிங்க, 19வது திருத்தச்சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றம் எப்போது கலைக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.