Header Ads



19 க்கு ஆதரவில்லை என SLFP அறிவிப்பு, பாராளுமன்றத்திற்கு மைத்தரி விரைவு, சபாநாயகருடனும் சந்திப்பு

பாராளுமன்ற அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தசட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்காதென எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருத்த சட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

அதனை உள்ளடக்கினால் மாத்திரமே 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் என எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.