Header Ads



பாராளுமன்றம் ஒத்திவைப்பு - 19 குறித்து 27, 28 ஆம் திகதிகளில் விவாதம்

19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னதாக சபாநாயகர் சமால் ராஜபக்ஸ இதனை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

அது வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தின் பின்னர் 28ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.

இன்று காலை 15 நிமிடங்களுக்கு முதலில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.  அதன் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று அவசரமாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12.35 மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போது எதிர்வரும் 27ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

1 comment:

  1. வீடு வாசல் இல்லாத ஏழைகள், பாவப்பட்ட மக்கள் கொஞ்சம் பாராளுமன்றத்தில் நித்திரை கொண்டுட்டு இருந்தாங்களே, அவங்க பாடு பரிதாபம்.....

    ReplyDelete

Powered by Blogger.