ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்கள் 10 ஆம் திகதி முதல் குறைக்கபடும் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 90 வீதம் குறைக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் முறைமையின் மாற்றத்துடனேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அதிகாரம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, தமது அதிகாரங்களைக் கைவிட விரும்பும் ஒரேயொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் எனவும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் வௌ்ளிக்கிழமையில் இருந்து அவரது அதிகாரம் 90 வீதத்தால் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment