Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது, ஏன் இந்த பாரபட்சம்..? மஹ்மூத் பலாஹி

-பா.சிகான்-

இலங்கைக்கு தற்போது  விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வட மாகாண முஸ்லீம் மக்கள் அகமகிழ்வுடன் வரவேற்பதாக யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் பேஷ்இமாம் மஹ்மூத் பலாஹி தெரிவித்துள்ளார்.

கடந்த 28 வருடங்களிற்கு பின் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறும் நீங்கள்  எம்மக்களின் துயரங்களை இனங்கண்டு அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும்.குறிப்பான கடந்த கால போரினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்து மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கை பூராகவும் சொல்ல முடியாத துயரங்களுடன் அகதி என்ற பட்டத்துடன் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நீர் உடை வீடு எதுவுமில்லாமல் இலைமறை காய்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.இம்மக்கள் படும் வேதனைகள் சொல்ல முடியாதவை.

எங்களது வேதனைகளை இலகுவாக அறீவீர்கள் என நம்புகின்றேன.காரணம் நீங்கள் அரசியல் பொருளாதார ரீதியில் உயர்மட்டத்தில் இருந்து வந்தவரல்ல.அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எனவே ஓர் அடிமட்ட ஏழையின் வேதனைகள் கஸ்டங்கள் தங்களிக்கு புரிந்திருக்கும்.

தங்கள் அரசாங்கத்தினால் எமது உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களிற்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டு திட்டங்கள் முறையாக இன்னும் கிடைக்கவில்லை.குறிப்பாக யாழ் முஸ்லிம் மக்களிற்கு இவ்வீட்டுத் திட்டத்தின் இறுதிக்கட்டமான நான்காவது திட்டத்தில் ஒரு வீடு கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் சில உயர் அதிகாரிகளும் அவர்களின் தான்தோன்றித் தனமான சில நிபந்தனைகளும் ஆகும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இவ்வீட்டுத்திட்டம் கிடைக்கும் என எம்மக்கள் நம்பி தவறான வழிநடத்தல் காரணமாக இருந்த குடிசைகளையும் தற்போது இழந்து மழையிலும் வெயிலிலும் அல்லற்படுகின்றனர்.

இதனை சிலர் சாதகமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.இம்மக்களிற்கு ஏன் இந்த பாரபட்சம் ? யாழ் முஸ்லீம் மக்கள் மக்கள் இல்லையா? பரம்பரை பரம்பரையாக தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்த மக்கள் இனியும் ஏமாறாது தமது சொந்த காணிகளில் குடியமர இந்திய வீட்டுத்திட்டம் வழி செய்ய வேண்டும். இதனை தாங்கள் தலையிட்டு அம்மக்களை மீளக்குடியமர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.